மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசித்திர வழக்குகள் பகுதி – 6

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Apr 16, 2022

siragu vischithra valzhakku1 Bach v. Walmart (2011)

இந்த வழக்கில் வால்மார்ட் எனும் அமெரிக்கப் பெருநிறுவனத்தை எதிர்த்து மேரி( Mary Bach) என்பவர் 2011 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.  95% பொருட்களை அமெரிக்கர்களிடம் விற்கும் நிறுவனம் வால்மார்ட். இதற்குஅமெரிக்க மாநிலங்களில் பல கிளைகள் உண்டு. இந்த நிறுவனம் 1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு உணவுகளும் வீட்டிற்குத் தேவையான பொருட்களும் இதரபொருட்களும் மலிவு விலையில் கிடைப்பதுதான் இந்த நிறுவனத்தின் சிறப்பு.

மேரி தன் வீட்டருகில் உள்ள வால்மார்ட் நிறுவனத்தில் சாசேஜஸ் வாங்கியபோது அதன் விலை 98 சென்ட்டுகள். ஆனால் பில் போடும்போது $1 எனப் போடப்பட்டதைக் கண்டறிந்தார். அதனை அங்கு உள்ள விற்பனையாளரிடம் தெரிவித்து பணத்தைத் திரும்பப் பெற்றார்.

மீண்டும் அதே பொருளை சில நாட்கள் கழித்து வாங்கிய மேரிக்கு அதே அனுபவம் ஏற்பட்டது. இம்முறை அவர் வழக்கு மன்றத்தை நாடினார். இந்த வழக்கிற்கு முகாந்திரம் இல்லை என்றும் வழக்கினைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வால்மார்ட் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால் மேரி அந்த நேரத்தில் மொத்தம் 4750 வால்மார்ட் நிறுவனங்கள் செயல்பட்டுவந்தன என்றும், ஒவ்வொரு நிறுவனத்திலும் இந்த மோசடி நடந்தால் அந்த நிறுவனத்தின் இலாபத்தை எண்ணிப் பார்க்கச் சொன்னார்.

ஆனால் வால்மார்ட் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் இது திட்டமிடப்பட்டது அல்ல என்றும் கிளிரிக்கல் தவறு என்றும் தன் வாதத்தை முன் வைத்தார். ஆனால் நீதிமன்றம் மேரிக்கு இழப்பீடாக 100$களும், வழக்கு செலவிற்காக 80$களும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.  இந்த வழக்கின் வெற்றி உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் செயற்பாட்டாளர்களைப் பல நிறுவனங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்திட வாய்ப்பை அமைத்தது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் பகுதி – 6”

அதிகம் படித்தது