சூலை 13, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

வியர்க்குருவைப் போக்க வழிமுறைகள்

சிறகு நிருபர்

Dec 19, 2015

viyarkuru2

  • வியர்க்குரு உள்ள இடத்தில், வெள்ளரிக்காயை அரைத்து தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், வியர்க்குரு பிரச்சனை நீங்கி, சருமம் குளிர்ச்சி பெரும்.
  • சருமத்தில் கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்து வந்தால் வியர்க்குரு பிரச்சனை தீரும்.
  • சீரகப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து, வியர்குரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் வியர்க்குரு நீங்கும்.
  • வேப்பிலையை அரைத்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவ வியர்க்குரு மறையும்.
  • பன்னீருடன் சந்தனப் பொடியை கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர வியர்க்குரு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
  • சோளமாவை நீர் சேர்த்து கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரால் கழுவினால், வியர்க்குரு உதிர்ந்துவிடும்.
  • பனிக்கட்டியைக் கொண்டு ஒற்றடம் கொடுத்தால், வியர்க்குரு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
  • வியர்க்குரு உள்ள இடத்தில், சாமந்திப் பூவின் சாற்றை தடவினால் குணமடையும்.
  • வெள்ளரி, கிருணிப்பழம் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் வியர்க்குரு, “அக்கி அம்மை” போன்ற நோய்கள் வராது.
  • சாதம் வடித்த கஞ்சியை வியர்க்குரு மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வியர்க்குரு குணமாகும்.
  • தினமும் குளிக்கும் போது கடலை மாவை தேய்த்து குளித்து வந்தால், அதிகம் வியர்ப்பது குறைந்து, வியர்க்குரு வருவது தடுக்கப்படும்.
  • வியர்க்குரு மீது வெங்காயச் சாற்றை தடவினால் வியர்க்குரு மறைவதுடன் உடல் குளிர்ச்சி பெறும்.
  • பப்பாளிச் சாற்றை முகத்தில் பூசினால் வியர்க்குரு மறைந்து முகம் பளபளக்கும்.
  • பருப்புக் கீரையை அரைத்து சாறெடுத்து, வியர்க்குரு உள்ள இடங்களில் தடவிவர வியர்க்குருக்கள் பட்டுப் போய்விடும்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வியர்க்குருவைப் போக்க வழிமுறைகள்”

அதிகம் படித்தது