சனவரி 18, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

விழித்திரு (கவிதை)

முனைவர்.கு.பாக்கியம்

Feb 3, 2018

Siragu penniyam2

 

ஏடெடுத்துப் படித்துவிட்டு

எழுதுகோலைத் தூக்கிவந்து

பெண்ணினமேபேதமின்றி

மனிதப் பிறப்பாகஉருவெடுக்க

எழுந்திடுக…. எழுந்திடுக….

வீறுகொண்டேஎழுந்திடுக

எனக்கூற ஆசைகொண்டு – இங்கு

அவசரமாய் ஓடிவந்தேன்

பெண் இனமே–நீ

கண்ணினைக் கயலாக்கி

ஆம் கயல்மீனாக்கி

நீர்கொண்டுவாழாதே

ஒற்றுமைப் பயிர்வளர்த்து

ஒன்றுநம் தேசமென்று

தொழில் துறையில் முன்னேறி

துயர்துடைக்கஎழுந்திடுக

அடிமைவிலங்கொடித்து

பெண்ணடிமைவிலங்கொடித்து

அறம் வளர்க்கஎழுந்திடுக.

தர்மம் தழைத்திடவே

தம் பணியைமுடித்திடுக!

வீடேஉலகமென்ற

பேதமையைஅகற்றிவிட்டு

பெண்ணினமேமானிடராய்

சாதனைகள் படைத்திடவே

இன்றேஎழுந்திடுக இனிதேஎழுந்திடுக!

தங்கத்தால் அலங்கரிக்க

பொம்மைகள் அல்லநாம்

வாழையடிவாழையாய்

குன்றெனவேஎழுந்திடுக

அச்சமும் நாணமும் மடமும் பயிற்பும்

நமக்குநன்னெறிசொத்துக்களே

சிறுகூட்டுச் சிறுபறவையாய்

சிக்கித் தவிக்காது

வானத்துவான்பருந்தாய்

வட்டமிட்டேஎழுந்திடுக!

Siragu penniyam3

 

 

தாய்மையின் மேன்மையை

உலகிற்குஉணர்த்திவிட்டு

சாதியற்றசமூகத்தை

படைத்திட இன்றேஎழுந்திரு!

இனிதேஎழுந்திரு!

தூற்றல் மொழிகேட்டு

துன்பத்தில் துவளாது

ஏற்றமிகுகொள்கையை

ஏற்றிடுகஇதயத்தில்

நேர்மைக்கும் நீதிக்கும்

தென்றலாய் தூது செல்க

கூர்மதிஅறிவால் தரணியைக் காத்திடுக

பூவாய் நிற்காதே… புயலாய்ப்புறப்படு

வெடிக்காதஅடுப்புகளை

வரவேற்கும் ஆண் இனத்தை

போற்றியேபுறப்படு

தங்கஅணிஏற்று

வெள்ளிப் பொருளுடனே

இரும்புவாகனத்தில்

பணம் சுமந்துவருகின்ற

பெண் இனத்தைமறந்துவிட்டு

சாதனைகள் பலபடைத்து

அன்பையும் பண்பையும்

பண்பாட்டுச் சூழலுடன்

பணிச்சிறப்பைத் தருகின்ற

பெண் இனத்தை

இனிமானிடப்பிறவியாய்

சுமத்துவத்தில் வரவேற்கும்

ஆண் இனத்தைவாழ்த்தியேபுறப்படு

அதுவும் இன்றேபுறப்படு

இனிதேபுறப்படு!

ஆணுக்குப் பெண் சமமாய்

பணிச்சிறப்பைக் காட்டிவிட்டு

ஆணிவேராய் உலகினைக் காத்திட

இன்றேஎழுந்திடுக….

இனிதேஎழுந்திடுக…..

பெண் இனமேஅன்பின் உறைவிடமே

வானினைநோக்கவைக்கும்

விடிவெள்ளியாய்

வாழ்வினில் உயரவே

உயர்கல்விகற்றிடுக.

உண்பதும் உறங்குவதும்

உயிரைச் சுமப்பதுவும்

உயிரினத்தின் பொதுதொழிலே

மானிடப் பிறவியாய் மகத்துவம் அறிந்து

பாரதிகண்டபுதுமைப் பெண்ணாய்

பாரினம் தழைத்திட இன்றேஎழுந்திடுக.

பெண்ணாய் பிறந்துவிட்டால்

மகிழ்பவர்யார்? பெண்குழந்தைக்கு

ஏங்குபவர்யார்?

இன்றையஎதிர்ப்புகள் நம்மை

ஏற்றிடும் ஏணிகள்

நல்வழிப் படுத்தும் தோணிகள்.

ஏமாற்றப்பட்டதாய் ஏங்காதே

உடைந்துபோகாதே

நாளையவரவுகள் – நம்

இதயவாசலில்

இன்பக் கூத்தடிக்கும்

நாட்டிற்குஉழைத்த

உத்தமர்கள் வரிசையிலே

கைவிளக்கேந்தியகாரிகை

நம் கண்முன்னே….

நியாயங்கள் சொல்லிவிட்டு

நகைமுகத்தைகாட்டிவிட்டு

வீறுகொண்டேஎழுந்திடுக

வேங்கையாய் இன்றே

குழந்தையாய் மனைவியாய்

தாயாய் மாமியாய்

மட்டும்தானோபெண்ணினம்

சிக்கலைசீராகஅவிழ்த்துவிட்டு

அஞ்சாதுஉழைத்திட இன்றேஎழுந்திடுக!

இனிதேஎழுந்திடுக!

Siragu pudhiya paadhai1

 

புலியைமுறத்தால் விரட்டியதும்

ஒரேமகனைஐந்துவயதுபாலகனை

வீரத்திலகமிட்டுவெள்ளாடைஅணிவித்து

நறுநெய் பூசியேவேல்கொடுத்து

நாட்டினைக் காக்கசென்றுவாமகனே

வென்றுவாஅனுப்பியதும் தாயுள்ளம் தான்..

வீரமிகுபெண்மையை

கற்பாகியஆயுதத்தால்

கட்டிப் போட்டாலும்

நிமிர்ந்தநன்னடையுடன்

நேர்கொண்டபார்வையால்

ஏழில்மிகுசிரிப்புடன்

அஞ்சாதுதுணிந்து

புதுமைக்குவழிகாட்டி

ஆழ்ந்துசிந்தித்து

காலமறிந்தேசெயல்பட்டு

நல்லதையேநினைத்து

நினைத்ததையேசெயலாக்கி

கனிவைப் பணிவோடுகலந்தூட்டும்

தாய்மைப் பண்புடனே

வீறுகொண்டேஎழுந்திடுக

மண்ணாசைபொன்னாசை

பெண்ணாசையென- மூவகையாய்

அஃறிணையில் ஒன்றாக

சேர்த்துவிட்டபொல்லாதஉலகமிது

அதிகாலைவேளையிலே

அனல் கக்கும் அடுப்படியில்

அனலோடுஅனலாக

அறுசுவைவிருந்தளிக்கும்

பெண் இனத்தைக் கண்டுவிட்டால்

வெடிக்காத ஸ்டவ் கூட

வெடிப்பதுவும் வேடிக்கையே

ஆவதும் பெண்ணாலே

அழிவதும் பெண்ணாலே– ஆம்

நன்மைகள் ஆவதும்

தீமைகள் அழிவதும்

பெண்ணால் தான்.

தான் தேய்ந்துபோனாலும்

தன்குடும்பம் தன்பிள்ளைஎன்றெண்ணி

கூன்விழுந்துபோனாலும்

குடும்பத்தைக் காத்துநிற்கும்

அச்சாணிபெண் இனம்

சுழன்றுவரும் உலகினிலே

சுழன்றாடிப் பணிமுடித்தே

சுரந்துவரும் கண்ணீரால்

உளம் தேற்றிக் கொள்ளாதே

 

Siragu penniyam1

 

மண்வீடுகட்டியே

மரப்பாச்சிபொம்மையுடன்

கைகோர்த்துவிளையாடும்

காலமெல்லாம் போயாச்சு

கணிப்பொறியும் செயற்கைக் கோளும்

விளையாடும் விளையாட்டுப் பொம்மைகள்

சரித்திரஏட்டினில்

சாதனைகள் படைத்திட

இன்றேஎழுந்திடு!. இனிதேஎழுந்திடு!.

 


முனைவர்.கு.பாக்கியம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விழித்திரு (கவிதை)”

அதிகம் படித்தது