ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் செலுத்த அவகாசம்Dec 21, 2016

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நவம்பர் 1முதல் டிசம்பர் 31வரைக்குள் விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்தும் நாள் வந்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மேலும் 60நாட்கள் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.

siragu-farmer

விவசாயிகள் 60 நாட்களுக்குள் பயிர்க்கடன் செலுத்தினால் அவர்களுக்கு மூன்று சதவிகித மானியம் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார் மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் ஆசிஷ்குமார் புடானி.

எடுத்துக்காட்டாக ஒரு விவசாயி பயிர்க்கடன் செலுத்தும் தேதி நவம்பர் 15என்று இருந்தால் அவர் ஜனவரி 15வரை பயிர்க்கடன் செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விவசாயி ஜனவரி 15க்குள் செலுத்தும்பொழுது அவருக்கு மூன்று சதவிகிதம் மானியம் கிடைக்கும்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகளுக்கு பயிர்க்கடன் செலுத்த அவகாசம்”

அதிகம் படித்தது