ஜூலை 11, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

வெள்ளந்தி சிற்பங்கள்!(கவிதை)

மகேந்திரன் பெரியசாமி

Jun 10, 2017

Siragu childrens

 

 

“வெள்ளந்தி” மனது..
குழந்தையின் மென்மனம்..
யாரேனும் அப்பாவி
எங்கேனும் அகப்பட்டால்
சமூகத்தில் ஏனையோர்க்குப்
புதியதோர் குதூகலம்-
‘அடித்திடு மொட்டையை!’

‘எழிலான எம் சிகையை
இறைவனுக்கு வழங்கும் முன்பு
எங்களின் அனுமதியை
ஒப்புக்கும் கேட்டதில்லை!’

‘சுற்றி நடப்பது
ஏதும் அறியாது-
பெற்றோரின் நேர்த்திக்
கடன் எதுவும் தெரியாது!’

‘செல்லுமிடம் செல்லுவோம்-
சொல்லும்சொற்கள் தாங்குவோம்!
ஊட்டுவன உண்ணுவோம்-
திணிப்பவற்றை விழுங்குவோம்!
ஏவல்களைத் தாங்குவோம்-
ஆட்டுவிக்கும் திசைகளுக்கு
விட்டிலென மாட்டுவோம்’- என்று
சொல்லாமல் சொல்லும் இவர்கள்
வெறும் குழந்தைகள் மட்டுமல்ல-

வாழையடி வாழையாய்
வாங்கி வந்த வழக்கமாய்-
மணிமுடியைத்
‘துறப்பதில் இன்பமும்’,
‘எல்லாம் உன்வசம்!’ என
‘நின்னைச் சரண்’ அடைவதிலும்

சின்னஞ்சிறு அகவையிலே
பசுமரத்தின் ஆணிகளாய்ப்
பாடம்கற்கும் பிஞ்சுகள்-

பெற்றோரின் ஏக்கங்களைத்
ஏற்கும் வழித் தோன்றல்கள்!
மற்றவர் கனவுக்காய்
மாளும் சிறு விழுதுகள்-

புத்தகப்பை பொதிசுமக்கும்
வித்தகத் தியாகிகள்-
செப்புக் கலக்காதப்
பத்தரைத் தங்கங்கள்-

குழந்தைகள் வடிவில் ஆன
தெய்வத்தின் “சிற்பங்கள்”!


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வெள்ளந்தி சிற்பங்கள்!(கவிதை)”

அதிகம் படித்தது