சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வேப்பிலையின் மருத்துவ குணங்கள்

சிறகு நிருபர்

Jun 13, 2020

siragu vembu1

1 கிருமி நாசியாக பயன்படும் வேப்பிலையை அரைத்து சாற்றை புண்களில் விட காயம் வேகமாக ஆறும்.

2. வேப்பங்குச்சிகளில் பல் துலக்குதல், வேப்ப்லைகளை தின்னுதல் செய்யும் பொழுது ஈறுகளில் உள்ள சொத்தை குணமாகும், வாய் நாற்றம் குணமாகும்.

3. வேப்பிலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது சுவாசம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

4. வேப்பிலைகள் மற்றும் பூக்களை அரைத்து உடலில் பூசி குளித்து வர தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

5. வேப்பிலைகளை அரைத்து பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் கடிகள் ஏற்பட்ட இடத்தில் பூச விஷம் பரவாமல் இருக்கும். பின் முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

6. வேப்பிலைகள் மற்றும் அவற்றின் பூக்களை பச்சடியோ அல்லது ரசமோ செய்து சாப்பிடும்போது வயிற்றில் உள்ள புண்கள் குணமாகும்.

7. அம்மை நோயை குணமாக்குவதில் நல்ல பங்கு வகிக்கிறது வேம்பு. வேப்பிலையை அரைத்து உடலில் பூசி, மஞ்சள் மற்றும் வேப்பிலை ஊற வைத்த நீரில் ஒரு வார காலம் குளித்துவர விரைவில் குணமாகும்.

8. வேம்பு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதால், இதனை உட்கொள்வதால் எந்த வித நோயும் தாக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

9. வேப்பிலைகளை நீரில் நன்கு காய்ச்சி குடித்துவர சளி தொந்தரவு குணமாகும்.

10. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் வேம்பு நல்ல மருந்தாக செயல்படுகிறது.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வேப்பிலையின் மருத்துவ குணங்கள்”

அதிகம் படித்தது