சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வேர்க்கடலை கொழுப்பு அல்ல.. ஒரு மூலிகை

சித்திர சேனன்

Nov 7, 2015

Peanutsவேர்க்கடலை மனித வளர்ச்சிக்கு உதவும் ஒரு சத்தான தாவரம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் சாதாரணமாக நாம் வேர்க்கடலைக்கு, இல்லை கடலை என்ற வார்த்தையை வேறு ஒன்றுக்கு பயன்படுத்தும் காலத்தில் இருக்கிறோம். இரு ஆண்கள் பேசிக்கொண்டால் பேசுகிறார்கள் என்போம், ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தால் கடலை போடுகிறார்கள் என்கிறோம். மகாத்மா காந்தி ஆட்டுப்பாலும், கடலையும் உண்டே அதிக நாள் வாழ்ந்தார் என்ற வரலாறும் படித்திருக்கிறோம். இந்த வேர்க்கடலையில் அப்படி என்னதான் உள்ளது என இனி காண்போம்.

தமிழகத்தில் நிலக்கடலை கோடை பருவத்தில் சூன், சூலை மாதங்களிலும், கார்த்திகை பட்டத்திலும், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பயிரிடப்படுகிறது. நல்ல வளமான செம்மண் பாங்கான காற்றோட்டமும், வடிகால் வசதி உடைய நிலமுள்ள இடத்தில் தான் கடலை நன்கு வளரும். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் களிமண் பகுதிகளிலும் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. கடலை விதையை விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 5 நாட்கள் கழித்து உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். நிலக்கடலைத் தாவரத்தில் பக்கக்கிளைகள் தோன்றும் போது 2 முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

verkadalai5இக்கடலையை இலைச் சுருட்டுப்புழு தாக்கும். இதன் தாக்குதலில் இருந்து பயிரைக் காக்க வேப்பங்கொட்டைச் சாற்றினை 5 சதவிகிதம் தயாரித்து தெளித்தால் இலைச்சுருட்டுப் புழு மடிவதோடு, பயிறுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது. இதற்காக தமிழக அரசு ஜிப்சம் உரங்களை மானிய விலையில் கொடுத்து வருவது கூடுதல் தகவலாகும்.

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பி விடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில், அது கொட்டை வைக்கும் பருவம் வரை எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் கடலை காய்பிடிக்கும் பருவத்திற்குப் பிறகு, எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைக் காணலாம். நிலக்கடலைச் செடியைச் சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

கர்ப்பிணிகளுக்கு:

verkadalai10

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பப்பை கட்டிகள், நீர் கட்டிகள் ஏற்படாது, அதுமட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். இந்த வேர்க்கடலையை தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்றப் பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயைத் தடுக்கும்:

Diabetic patient doing glucose level blood test

தமிழக மக்களுக்கு வேர்க்கடலை என்றாலே, அது கொழுப்பு நிறைந்தது, இதனால் உடல் பருமன் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதயநோய் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கடலையை ஆராய்ந்தவர்கள், இந்த நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்கின்றனர். காரணம் கடலையில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்தும், இதனுடன் அதிகமான புரதச் சத்தும் இருப்பதால் இவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரை அளவு ரத்தத்தில் மிகக் குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும். ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே அன்றாட உணவில் வேர்க்கடலை சேர்க்கலாம்.

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்து, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் கடலையை உண்டு வந்தால் எலும்பு சம்பந்தமான நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் இது பித்தப்பை கல்லைக் கரைக்கக் கூடியது.

கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

verkadalai4இதயம் காக்கும்:

நிலக்கடலை சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்று நாம் நினைக்கிறோம், அது உண்மையல்ல. மாறாக உடலின் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டுமென்று நினைப்பவர்களும் நிலக்கடலையை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது, இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது, இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாகத் திகழ்கிறது.

இளமையைப் பராமரிக்க:

இது இளமையைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையைக் காக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்க:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. இதில் மூளை வளர்ச்சிக்குத் தேவைப்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பலனளிக்கிறது, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது, மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தம் குறைகிறது.

கொழுப்பைக் குறைக்க:

verkadalai8

இந்த தலைப்பை படிப்பவர்களுக்கு வியப்பு ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச்சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மை இல்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் அதிகம் நிலக்கடலையில் உள்ளது. இக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்தானது நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து, நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது, பாலி அன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாம் பருப்பை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகம். நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கருப்பைக் கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

verkadalai9

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் போன்றவை நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்புகளில்தான் சத்து அதிகம் என்று கருதுகிறோம், அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்கு உண்டு.

வேர்க்கடலையை தோல் நீக்காமல் சாப்பிட்டாலே நிறைந்த சத்துக்கள் நமக்கு வந்து சேரும். இக்கடலையில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் புற்றுநோய் உருவாகக் காரணமான செல்களை அழித்து விடுகிறது. குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள அல்சீமர், பார்கின்சன் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கிறது.

சோயா பீன்சிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது. முட்டையில் உள்ளதை விட 2 ½ மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் உண்டு. வேர்க்கடலையை சாப்பிடுவதால் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட், ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கியக் காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவதைத் தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தை இல்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே காலகட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் அதிகரித்திருக்கிறது.

இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலையை சாப்பிட ஆரம்பித்தால், நிலக்கடலையை அதிக விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்றும் கருதித்தான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்துத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வேர்கடலையை உண்டு வாழ்வோர் நோய், பிணிகள் அண்டாத சுகமான வாழ்வைப் பெறுவர்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வேர்க்கடலை கொழுப்பு அல்ல.. ஒரு மூலிகை”

அதிகம் படித்தது