ஶ்ரீலங்காவில் ஜூலை கறுப்பு(கவிதை)
ராஜ் குணநாயகம்Jul 23, 2022
அன்று வெலிக்கடையில்
அன்று தமிழர்களின்
அறவழிப்போராட்டங்களில்
அன்று பட்டலந்த சித்திரவதை முகாமில்
அன்று பிந்துனுவெவவில்
அன்று முள்ளிவாய்க்காலில்
சொந்த நாட்டு மக்களை
வேட்டையாடிய
அதே
இரத்தக்காட்டேறிகள்
பிணந்தின்னிகள்
இன்று
காலிமுகத்திடலில்
அதே
கோரப்பசியோடும்
இரத்தம் வழிந்த
கோரப்பற்களோடும்
அந்த இரத்தவாடை
தீர்வதற்குள்
அறவழியில் போராடும் மக்களை
வேட்டையாட தயாராகிவிட்டன.
அன்றுவரை
ஶ்ரீலங்காவில்
தமிழ் மக்களுக்கு
மாத்திரமே
கறுப்பாயிருந்த ஜூலை
இன்று
சிங்கள சகோதரர்களுக்கும்
கறுப்பாய் தெரிய தொடங்கியிருக்கிறது
அதே வலிகளோடும்
ரணங்களோடும்!
ஈழன்.
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஶ்ரீலங்காவில் ஜூலை கறுப்பு(கவிதை)”