மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம்: நெடுவாசல் மக்கள்



Mar 1, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு செயல்படுத்திய ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் கடந்த 14 நாட்களாகவும், நெடுவாசல் பகுதிக்கு அருகே உள்ள கோட்டைக்காட்டில் கடந்த 4 நாட்களாகவும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu neduvasal

நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச்செயலகத்தில் சந்தித்தனர். சந்திப்பின்போது, ஹைட்ரோகார்பன் திட்டம் இன்னும் ஆய்வில்தான் உள்ளது, இத்திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது, மேலும் இது போன்ற விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்று உறுதியளித்தார் முதல்வர்.

நெடுவாசல் மக்களிடம் போராட்டக்குழுவினர் தெரிவிக்கையில், வாய்மொழியாக பிறப்பிக்கும் உத்தரவை ஏற்க முடியாது, இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று நெடுவாசல் மக்கள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம்: நெடுவாசல் மக்கள்”

அதிகம் படித்தது