மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைMar 2, 2017

புதுக்கோட்டைமாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு செயல்படுத்திய ஹைட்ரோகார்பன்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் கடந்த 15நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-neduvasal2

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் மட்டுமல்லாது தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவது, மனித சங்கிலி நடத்துவது போன்ற பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர், திரை உலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று நெடுவாசல் போராட்டக் குழுவினர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். சந்திப்பின்போது, ஹைட்ரோகார்பன் திட்டம் இன்னும் ஆய்வில்தான் உள்ளது, இத்திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது, மேலும் இது போன்ற விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அரசுசெயல்படுத்தாது என்று உறுதியளித்ததுடன் போராட்டத்தை கைவிடுமாறும் வேண்டுகோள் விடுத்தார் முதல்வர்.

முதல்வரின் வேண்டுகோள் குறித்து போராட்டம் நடத்தும் மக்களிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் லோகநாதன் ஆகியோர் போராட்டம் நடத்தும் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை”

அதிகம் படித்தது