மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: நாகையில் போராடிய 200 பேர் கைதுMar 31, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து நெடுவாசல் மக்கள் 22 நாட்களாக போராட்டம் நடத்தினர்.

Siragu-neduvasal2

பொதுமக்கள் அனுமதியின்றி இத்திட்டம் செயல்படாது என்று மத்திய, மாநில அரசு கேட்டுக்கொண்டதையடுத்து இப்போராட்டத்தைக் கைவிட்டனர் நெடுவாசல் போராட்டக்காரர்கள்.

இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை தமிழகம் உட்பட நாடுமுழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. அதனால் போராட்டம் நடத்துவது பற்றி நெடுவாசல் மக்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.

மேலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம் மேலக்குருவாடியில் கைகளில் கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இத்திட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணறு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்ட 200 பேரை கைது செய்தது காவல்துறை.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: நாகையில் போராடிய 200 பேர் கைது”

அதிகம் படித்தது