மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் தீர்மானம்



Mar 31, 2017

சென்ற திங்கட்கிழமை(27.03.17) தமிழகம் உட்பட நாடுமுழுவதிலும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. அதன்படி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

Siragu neduvasal

இதற்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று(31.03.17) நெடுவாசலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முன்னிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நெடுவாசல் பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணறுகளை அகற்றி மறுசீரமைத்து விளைநிலங்களாக மாற்றித்தர வேண்டும், ஊராட்சி பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலங்களாக அறிவிக்க வேண்டும், இத்திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் தீர்மானம்”

அதிகம் படித்தது