நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம்Feb 24, 2017

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயுவை பூமியிலிருந்து எடுக்க, கர்நாடகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

Siragu hydro carban

15 ஆண்டுகளுக்கு ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயுவை இந்தத் தனியார் நிறுவனம் எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கத்துள்ளது மத்திய அரசு.

ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயுவை எடுக்க 5000 மீட்டர் அளவிற்கு பூமியில் துளையிடப்படும். இதனால் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இத்திட்டத்தால் நெடுவாசல் கிராமத்தையே சுடுகாடாக்கிவிடும் என்று குற்றம்சாட்டி நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி கும்பகோணத்தைச் சேர்ந்த அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம்”

அதிகம் படித்தது