ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரிக்கிறது: மார்ச் 2ல் சென்னையில் உண்ணாவிரதம்
Feb 27, 2017
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் உள்ளிட்ட பதிமூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் நிலத்தடி நீர் குறையும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து கடந்த 12 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகின்றனர் நெடுவாசல் கிராம மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்.
நெடுவாசல் கிராம மக்களுடன் சேர்ந்து மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளும் போராடி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய இளைஞர் மாணவர் அமைப்பு, இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மார்ச் 2ல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவம் போராட்டம் வலுபெற்று உள்ளது. இதனால் சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரிக்கிறது: மார்ச் 2ல் சென்னையில் உண்ணாவிரதம்”