மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அக்டோபரில் தமிழக உள்ளாட்சித் தேர்தல்



Sep 26, 2016

அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் நேற்று(25.09.16) மாலை வெளியிட்டார்.

siragu-election

கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், தலைவர் பதவிகள் என்று மொத்தம் 1,31,794 பதவிகளுக்காக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(26.09.16) தொடங்குகிறது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 03.10.2016. இதில் 9098 வாக்குச்சாவடியும், 75,933 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அமைக்கப்பட உள்ளது.

அக்டோபர் 21 ந்தேதி வாக்கு எண்ணிக்கையும், 26 ந்தேதி பதவி ஏற்பும் நடைபெறும்.

இதையடுத்து மேயர் உள்ளிட்ட மறைமுகத் தேர்தல் நவம்பர் 2 ந்தேதி நடைபெறும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அக்டோபரில் தமிழக உள்ளாட்சித் தேர்தல்”

அதிகம் படித்தது