மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: சுட்டெரிக்கும் வெயிலுக்கு 2 பேர் பலி



May 4, 2017

இந்த ஆண்டு கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Siragu hot1

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று ஆரம்பித்துள்ளது. இன்று ஆரம்பித்த கத்திரி வெயில் இம்மாதம் 29 வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும், உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். எனினும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வறண்ட வானிலையே நிகழும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடுமையான வெப்பம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி மார்க்கெட் அருகே 60 வயது முதியவர் பலியாகியுள்ளார். மேலும் விழுப்புரம் சாலையில் சென்ற 70 வயது முதியவர் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியாகியுள்ளார். உயிரிழந்த இரண்டு பேர் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடுமையான வெப்பம் நிகழ்வதால் பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: சுட்டெரிக்கும் வெயிலுக்கு 2 பேர் பலி”

அதிகம் படித்தது