மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த புதிய விதிமுறைகள்



May 5, 2017

சட்டவிரோதமாக விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர் ரியல் எஸ்டேட் அதிபர்கள்.

Siragu-madras-high-court

இந்த மேல்முறையீடு மனுவின் விசாரணையில், 2016, அக்டோபர் 20ம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து ராஜேந்திரன் முறையீடு வழக்கு தொடர்ந்தார். மறு உத்தரவு வரும் வரை பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை தொடரும் என்று கூறியது நீதிமன்றம்.

இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வீட்டு வசதி வாரிய துறை சார்பில் 2 அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த கட்டணமும் புதிய விதிமுறைகள் படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த புதிய விதிமுறைகள்”

அதிகம் படித்தது