மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அச்சடிக்கும் மையத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு



Dec 24, 2016

நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் மையத்தில் தற்போது புதிய ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

siragu-five-hundred-notes

நவம்பர் 8 ம் தேதி அன்று பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அறிவித்தது முதல் புதிய 500, 2000ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நடந்து வந்தது. நவம்பர் 10 முதல் தினமும் 500 ரூபாய் நோட்டுக்கள்3.5 மில்லியன் அளவுக்கு அச்சடிக்கும் பணி நடந்து வந்தது.

தற்போது 19 மில்லியன் அளவுக்கு பல மதிப்புகள் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதில் புதிய ஐநூறு ரூபாய் நோட்டுக்களை 10 மில்லியன் அளவுக்கு அச்சடிக்கப்பட்டு வருகிறது. மற்றவை ரூ.100, ரூ.50 நோட்டுக்கள் அச்சடிக்கபடுகின்றன. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படவில்லை.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அச்சடிக்கும் மையத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு”

அதிகம் படித்தது