மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அதிமுக அலுவலகத்தில் சசிகலா புஷ்பாவின் கணவர், வக்கீல் மீது தாக்குதல்



Dec 28, 2016

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

siragu-aiadmk-party-office

சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யக்கூடாது எனக்கோரி எம்.பி., யான சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நாளை அதிமுக பொதுக்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தார். அதற்கான விண்ணப்பத்தை பெறுவதற்காக சசிகலா புஷ்பாவின் வக்கீல் மற்றும் கணவரும் அதிமுக அலுவலகம் சென்றனர்.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் உள்ள கூட்டத்தினர் தாக்கியதில் சசிகலா புஷ்பாவின் கணவர் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிமுக அலுவலகத்தில் சசிகலா புஷ்பாவின் கணவர், வக்கீல் மீது தாக்குதல்”

அதிகம் படித்தது