மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அதிமுக எம்.எல்.ஏ-க்களை கண்டுபிடிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு



Feb 10, 2017

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சார்ந்த இளவரசன் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். குன்னம் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஆர்.டி.ராமச்சந்திரன் 8ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்கு கலந்து கொள்வதாகச் சென்றார்.

Siragu chennai highcourt

அதன் பிறகு அவரை காணவில்லை, மேலும் அவர் உட்பட 130 எம்.எல்.ஏ-க்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ., சண்முகநாதன் தெரிவித்துள்ளார். கூவத்தூர் காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் செய்தோம், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் காவல் துறை அதிகாரிகள் எடுக்கவில்லை. எங்களது எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் உட்பட 130 எம்.எல்.ஏ-க்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த இளவரசன் கூறியுள்ளார்.

கிருஷ்ணராஜபுரம் எம்.எல்.ஏ., கீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அவரது கணவர் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார்.

இம்மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், இவ்வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென்று தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிமுக எம்.எல்.ஏ-க்களை கண்டுபிடிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு”

அதிகம் படித்தது