மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அதிமுக பொதுச்செயலாளராக நாளை(31.12.2016) சசிக்கலா பதவியேற்பு



Dec 30, 2016

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனயில் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்.

siragu-sasikala

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை தேர்ந்தெடுக்க அதிமுக கட்சியினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதில் பொதுச்செயலாளராக சசிகலாவை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமயிலான நிர்வாகிகள் சசிகலாவிடம் ஒப்படைத்தனர். இதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்ததையடுத்து நாளை அவர் பொதுச்செயலாளர் பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இன்று மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிமுக பொதுச்செயலாளராக நாளை(31.12.2016) சசிக்கலா பதவியேற்பு”

அதிகம் படித்தது