மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அதிமுக –வின் இரு அணிகளும் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல்



Apr 24, 2017

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக, ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகளாக பிரிந்தது. இதையடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் தனக்குத்தான் என்று இருஅணிகளும் போட்டிக்கொண்டதால் அச்சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.

Siragu admk

சில நாட்களுக்கு முன்பு சசிகலா அணியைச் சேர்ந்தவர்கள், கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து விலக்குவதாக அறிவித்தது. மேலும் ஓ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைவதாக முடிவு எடுக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை வேண்டும், சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ஓ.பி.எஸ் அணி தெரிவித்துள்ளது.

ஆனால் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது எடப்பாடி பழனிச்சாமி அணி. எனவே இரண்டு அணிகளிலும் முரண்பாடு இருப்பதால் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிமுக –வின் இரு அணிகளும் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல்”

அதிகம் படித்தது