மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: ஏழு இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்கா வர தடை



Jan 30, 2017

அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற ஏழு இஸ்லாமிய நாடுகளின் மக்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும் அமெரிக்காவை ஆதரிப்பவர்கள் மட்டுமே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

Siragu Trump

இந்த நடவடிக்கையின் கீழ் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் போன்ற ஏழு நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விசா தடை பட்டியலில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தடை விதிப்பது தொடர்பான பரிசீலனை நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ரின்ஸ் பிரிபஸ் தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: ஏழு இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்கா வர தடை”

அதிகம் படித்தது