மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அரசு அலுவலக பணிகள் பாதிப்பு: 2-வது நாளாக நீடிக்கும் தமிழக அரசு ஊழியர்களின் போராட்டம்



Apr 26, 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 64 துறைகளைச் சேர்ந்த 5 லட்சம் ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Siragu gov staffs struggle

வேலை நிறுத்தப் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று(26.04.17) தமிழகத்தில் உள்ள வட்டார அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போராட்டத்தினால் அரசு அலுவலக பணிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சி நிவாரண பணி மற்றும் அரசுத் துறை சேவைகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் பொது மக்கள். இந்த கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை மற்றும் நாளை மறுதினமும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்போராட்டம் நடத்தும் தமிழக அரசு ஊழியர்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசு அலுவலக பணிகள் பாதிப்பு: 2-வது நாளாக நீடிக்கும் தமிழக அரசு ஊழியர்களின் போராட்டம்”

அதிகம் படித்தது