மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆடைக் கட்டுப்பாடு கேரள தேவாலயங்களிலும் வருகிறது



Dec 20, 2016

கேரளாவில் உள்ள கோவில்களில் வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கோவில்களுக்கு ஆண்கள் மேல்சட்டை அணிந்து வருதல், கைலி அணிந்து வருதல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.

siragu-church-marriage

இதைத் தொடர்ந்து தற்போது பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் சுடிதார் அணிந்து பெண்கள் கோவிலுக்கு வரக்கூடாது போன்ற அறிவிப்புகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது இந்த ஆடைக் கட்டுப்பாடு கேரள தேவாலயங்களிலும் வருகிறது. தேவாலயங்களில் திருமணங்கள் நடைபெறும்பொழுது மணமகள் மேலை நாட்டு கலாச்சாரத்தின்படி வெள்ளை கவுன்கள் அணிவது வழக்கம். அதிகமான கிறிஸ்தவர்கள் கொண்ட கேரளாவில் பல ஆண்டுகளாக இவ்வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் கேரள தேவாலயங்களில் கவுன் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற பருமலா தேவாலயத்தின் பங்குத்தந்தை குரியகோஸ் மணமகள் கவுன் அணிந்து வருவதை நாங்கள் விரும்பவில்லை, சேலை அணிந்து வரவே சொல்கிறோம். இத்தடை பல மாதங்களாக அமலில் உள்ளது என்றார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆடைக் கட்டுப்பாடு கேரள தேவாலயங்களிலும் வருகிறது”

அதிகம் படித்தது