மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆட்சி அமைக்க உரிமை கோரி எடப்பாடி பழனிச்சாமி ஆளுநருடன் சந்திப்பு



Feb 14, 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா.

Siragu governor

அக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக-வின் சட்டமன்ற கட்சித் தலைவராக அங்குள்ள எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தேர்வுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் உரிமை கோர உள்ளதாக தெரிவித்தார்.

பின் ஆளுநர் அழைப்பு விடுத்ததை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 12 பேர் ஆளுநரை சந்தித்தார். அதன்படி செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய் சுந்தரம், சரோஜா, ராஜலட்சுமி, டி.டி.வி. தினகரன், அன்பழகன், வேலுமணி, நடராஜ் போன்றோரும் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆளுநரை சந்தித்தனர்.

ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை ஆளுநரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. சந்திப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆட்சி அமைக்க உரிமை கோரி எடப்பாடி பழனிச்சாமி ஆளுநருடன் சந்திப்பு”

அதிகம் படித்தது