மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயிலின் தாக்குதலுக்கு 48 பேர் பலி



Apr 20, 2017

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக கடந்த 17ம் தேதி 43 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Siragu summer

கடுமையான வெப்பம் காரணமாக ஆந்திராவில் 20பேரும், தெலுங்கானாவில் 28 பேரும் என இரண்டு மாநிலங்களிலும் இதுவரை 48 பேர் பலியாகியுள்ளனர். வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால் மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஏப்ரல் 19ம் தேதி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபோதும், இன்றும்(20.04.17) வெப்பநிலை அதிகமாகவே காணப்படுகிறது. எனவே மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்த மே மாதத்தில் கடும் வெயில் நிலவுவதால், இக்கடும் வெயிலிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயிலின் தாக்குதலுக்கு 48 பேர் பலி”

அதிகம் படித்தது