மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் கனமழையால் மக்கள் அவதி



Sep 27, 2016

கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா, கோதாவரி உள்ளிட்ட பல்வேறு நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இவ்விரு மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

siragu-thelungaanaa-flood2

தெலுங்கானாவில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மழையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க இந்திய விமானப்படை வீரர்கள் வரழைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. ஐதராபாத்தில் 1908 க்குப் பிறகு இப்பொழுதுதான் இம்மாதிரியான வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் கனமழையால் மக்கள் அவதி”

அதிகம் படித்தது