மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆன்லைனில் ரயில் டிக்கட் முன்பதிவு: ஜூன் 30 வரை சர்வீஸ் கட்டணம் இல்லை



Apr 1, 2017

நவம்பர் மாதம் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தது. அதன் பிறகு பணமற்ற பரிவர்த்தனை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Siragu railway station

அதன் அடிப்படையில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை கொண்டு வரும் வகையில் ஆன்லைனில் ரயில் டிக்கட் முன்பதிவு செய்வோருக்கு ஜூன் 30வரை சர்வீஸ் கட்டணம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் எடுக்கப்பட்டது.

இதற்கு முன்பு ஐஆர்சிடிசி-யில் ரயில் டிக்கட் முன்பதிவு செய்வோருக்கு 20 முதல் 40 வரை வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆன்லைனில் ரயில் டிக்கட் முன்பதிவு: ஜூன் 30 வரை சர்வீஸ் கட்டணம் இல்லை”

அதிகம் படித்தது