மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக ஆட்சிமன்றக்குழு 15ம் தேதி கூடுகிறது



Mar 11, 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி தற்போது காலியாக உள்ளது. இத்தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

Siragu election

எனவே பல்வேறு கட்சியினரும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிவதற்கான வேலையில் இறங்கியுள்ளனர். சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் ஜெயலலிதா.

தற்போது காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவது என்ற கேள்விக்கு அதிமுக ஆட்சிமன்றக்குழு தேர்வு செய்யும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதன் படி வரும் 15ம் தேதி அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று ஆலோசனை செய்யப்பட்டு வெளியிடுவதாகத் தெரிகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக ஆட்சிமன்றக்குழு 15ம் தேதி கூடுகிறது”

அதிகம் படித்தது