மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய தூதரகம்: இ-விசா என்ற பெயரில் போலி இணையதளங்கள்



Dec 28, 2016

இந்திய அரசின் இணையதளம் போன்றே இ-டூரிஸ்ட் விசா சேவை இணையதளம் என்ற பெயரில் பல போலி இணையதளங்கள் இணையத்தில் வலம் வருகிறது. இந்திய அரசின் இ-டூரிஸ்ட் விசா இணையதளங்கள் போலவே e-touristvisaindia.com, indianvisaonline.org.in, e-visaindia.com, indiavisa.org.in போன்ற இணையதளங்கள் செயல்பட்டு வருகிறது.

siragu-visa

இந்த இணையதளங்கள் பல்வேறு வழிகளில் விண்ணப்பதாரர்களை மோசடி செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விண்ணப்பதாரர்கள்  indianvisaonline.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் இ-டூரிஸ்ட் சேவைகளைப் பெற வேண்டும். இது தொடர்பாக வேறு எந்த இணையதளத்தையும் தொடர்புகொள்ள வேண்டாம், இவ்வாறான போலி இணையதளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய தூதரகம்: இ-விசா என்ற பெயரில் போலி இணையதளங்கள்”

அதிகம் படித்தது