மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தி எதிர்ப்பு (கவிதை)

இல. பிரகாசம்

Jan 27, 2018

siragu hindhi edhirppu1

 

 

தோழா வீறுகொண்டு எழுந்து வருவாய்

தொற்று நோய்போல் இந்தி புகுந்தது!

ஆரியம் செய்த சூழ்ச்சியால் நம்மவர்

யாரென நாமே மறந்திட லாகுமோ?

 

உடுத்தும் உடைமுதல் பேசு மொழியாய்

உள்ளே நுழைந்து இனிக்கப் பேசுவார்

சொக்கிடும் மாதுபோல் மயக்கிப் பேசுவார்

சொல்லில் எல்லாம் தீமை தானிருக்கும்

 

பிறமொழி ஒன்று கண்டால் அதனை

அறவே ஒழித்திட விழைவார்! அண்டி

பிழைத்த போதும் நம்மை எதிரியென

பிழைத்தும் எண்ணுவதை ஒருநாளும் ஒழியார்

 

வடமொழி ஆதிக்கம் நாளும் வளர்தலை

வாளா விருந்து காண்பது தகுமோ?

தென்மொழி யாம்நம் தமிழ்மொழி மீது

புன்மொழி யேசும் கயவரை ஒழிப்போம்.

 

இந்திப் புழுக்களுக்கு சாமரம் வீசுவார்

இருந்திடல் மலத்திற் கொப்பா தவரோ?

இழுக்கு ஒன்று வருமெனில் அதனை

அழித்து நம்மொழியைக் காப்பதே கடமை

 

(ஜனவரி 25- மொழிப்போர் தியாகிகள் தினம்)


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தி எதிர்ப்பு (கவிதை)”

அதிகம் படித்தது