மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இனியாவது சொல் !! (கவிதை)

மீனாட்சி சுந்தரமூர்த்தி

Nov 3, 2018

siragu iniyaavadhu sol1

 

சின்னச் சின்ன
சண்டையிட்டு
வாழ்ந்தார், நம்மவர்.

கொடுங்கோலர்
சிலரே,
மண் மழை, தட்பம்
வெப்பம்
ஒத்தியைந்த வளமை
இங்குண்டு.

கனவுத் தேசமிதைக்
காண
வந்தார் அயலவர்.
பூக்குவியலில்
நாகங்கள் புகுந்தன.

பாலாறும், தேனாறும்
ஓடிய
பூமியில். ஓடியது
இரத்தம் ஆறாய்.

எரித்த சாம்பலில்
உயிர்க்கும்
பீனிக்ஸ் பறவையாய்
தலைநகர்.

கூட்டுத் தீக்குளிப்பில்
எமது
அன்னையர், வீரச்சாவில்
எம் தந்தையர்.

இறுதியாய் வந்து
இருநூறு,
ஆண்டு, வளம் உறிஞ்சி
ஒருவழியாய்ப்
போனார் ஓடி,
தேம்ஸ் நதிக் கரையார்.

மந்திகளின் கையில்
பூ மாலை
ஆனாய் , சூது, களவு,
சுரண்டல்
வகை வகையாய்
பிய்த்தல்,

எதுவும் தாங்குவாய்
என்று
இது வரையில்
வாய் திறவாத என்
இந்திய தேசமே !

இனியாவது சொல் !
இவர்களைத்
திருத்துவது எப்படி?


மீனாட்சி சுந்தரமூர்த்தி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இனியாவது சொல் !! (கவிதை)”

அதிகம் படித்தது