மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இயற்பியல்

கி. கிருஷ்ண குமார்

Nov 9, 2019

தமிழ் இலக்கியங்கள் வாழ்க்கையை எதிரொலிக்கின்றன. இயல்பு வாழ்க்கையா அல்லது கற்பனை வாழ்க்கையா என்பதை முடிவு செய்வதில் சில நேரம் தடுமாற்றம் நிகழும் ஏன் நம் சிலப்பதிகாரத்தையே கற்பனைக் கதை என்றும் உரைப்பர்.

அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்ததோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் படியான செய்திகள் உள்ளன. இந்த நூற்றாண்டில் உள்ள சில கருவிகள் அக்காலத்திலேயே பயன்பாட்டில் இருந்தன.

Dec-23-2017-newsletter1

இன்றைய தினம் எத்தனையோ இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. தமிழ் மொழியின் பிறப்பிடம் குமரிக் கண்டமே குமரிக்கண்டம் பெரியது. ஆஸ்திரேலியா முதல் தென்ஆப்பிரிக்கா வரை இந்தியாவையும், இமாசல பிரதேசத்தையும் இணைந்தது உலகின் முதலில் பேசிய மொழி தமிழ்மொழிதான். ஆனால் குமரிக்கண்டம் மூழ்கியதை சிலப்பதிகாரம் மூலம் தெரிந்து கொள்ளலாம். உலகின் 6 துவக்க மொழிகளில் தமிழ் மொழி முதல் மொழி ஜப்பான் நாடு அனைத்து பல்கலைக்கழகங்களிளும் யாதும் ஊரே யாவரும் தேநீர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடல் வாயிலில் தமிழ் மொழியிலும், ஜப்பான் மொழியிலும் எழுதப்பட்டுள்ளதைநாம் அறியும் போது நம் உள்ளம் மிகவும் பூரிப்படைகிறது.

ஐம்பெரும் பூதங்களின் படைப்பு உலகம், இறைவன் படைப்பன்று அது எனத் தொல்காப்பியம் (மரபியல் -89) சுட்டும். ‘நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம உலகம் அணுவின் தோற்றம் என்கிற கருத்து பின்னர் தலையெடுத்தது. கிரேக்கத்திலும் இவ்வகை கருத்து ஒரு காலத்து நிலவியது. இன்று ‘அணு’ நியூட்ரான் என்பதோடு இணைத்துப் பேசப்படுகிறது. இயற்பியலின் பிற கூறுகளான ஒலி, ஒளி பற்றிய பல குறிப்புக்களும் உள்ளன. கதிர், சுடர், ஒளி, நிலா முதலிய சொற்கள் ஒலியைக் குறிக்க உள்ளன. சும்மை, அரவம், ஒலி, ஓதை, கம்பலை என்பன ஒலியைச் சுட்டும்.

மேலும், கி.பி 16ஆம் நூற்றாண்டு வாக்கில் வடிவமைக்கப்பட்ட தற்காலததிய கரியக் கடிகை தொழில் நுட்ப ஆதாரம் நெடுநல்வாடையிலும் இடம் பெறக் காண்கிறோம்.
வான நடுவரையாகிய சூரியவீதி செங்குததாக நிறுத்தி வைக்கப்பட்ட கோலினைச் சுற்றி வட்டம் அமைத்து கிழக்கு, மேற்கில் வரையிட்டு, அதில் விழும் நிழல் அளவைக் கொண்டு காலததைக் கணிக்கும் உத்தியினை நம் முன்னோர் அறிந்திருந்தனர்.
‘விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்புலம்
. . . . . . .
. . . . . . . . மனைவகுத்து (நெடுநல்வாடை-73:78)
வாழ்ந்தனர் நம் முன்னோர். ஆயின் இன்றைய நவீன அணுவியல் கடிகாரம் ( ) நம் தொழில் நுட்ப வளர்ச்சி. அவ்வாறே, ‘தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படிமம்’ பற்றிய கபிலர் சிந்தனையே இன்று அண்டவெளி ஆராய்ச்சியில் காலங்காட்டிகளாக விளங்கும் தொலைகாட்டி வில்லைகள்!
‘வலவன் ஏவா வானவூர்தி (புறம்-27:9) என்கிற உறையூர் முது கண்ணன் சாத்தனார் கருத்தோட்டமே இன்றைக்கு வலவன் அல்லது ஓட்டுநர் இன்றி விண் சுற்றித் திரும்பும் ரஷிய நாட்டு எனர்ஜியா –புரான் அதி பிரம்மாண்ட விண்வெளி ஓடத்தின் முன்னோடிச் சிந்தனை எனலாம். புலவர் பாடும் புகழுடையோர் விசிம்பில் வலவன் ஏவா வானவூர்தி எய்தும் புலவர்களால் பாடப்பெறும் புகழ் உடையாம் வானத்துப் பூட்டுனர் இல்லாமல் வானவூர்தியில் பறந்து செல்லும் பெருமை அமையா.
பேரண்டத் தோற்றம் குறித்து மேலை நாட்டு அறிஞர் பெருமக்கள் கடந்த சில நூற்றாண்டுகளாகப் பெரும் முயற்சி எடுத்து தங்களின் கருத்துகளை முன்வைக்கின்றனர். அறிஞர் பெருமக்கள் பலரும் ஆய்வு செய்து வருவதால் மாறுபட்ட கருத்துக்களும் எழுகின்றன.
எனினும், சென்ற நூற்றாண்டில். ஃபிரெட் ஹாயல் என்பார் பெருவெடிப்புக் கொள்கையில் நம்பிக்கை கொண்டு என்னும் சொல்லை உருவாக்கிப் பிரபஞ்சக் கோட்பாட்டினை விளக்கினார்.
இன்று பெரும்பாலோர் பெருவெடிப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்கின்றனர். தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டும் வருகின்றனர்.
பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் எதுவும் அறிய முடியாத நுண்ணிய ஒன்றிலிருந்து ஒரு நொடிப்பொழுதிற்கும் குறைவான நேரத்தில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. பருப்பொருட்கள் அனைத்தும் ஒன்றாகச் சுருங்கி அணுவை விடச் சிறியதாகி மீவெப்பமும் அடர்த்தியும் கொண்ட பந்தாக உருவாயின. அப்பந்து மெல்லக் குளிர்ந்து விரிவடைந்து மீண்டும் சிதறியது. அப்போது ஆற்றலும் பருப்பொருட்களும் எல்லாத் திசைகளிலும் பரவின. இந்த நிகழ்வினையே பெரு வெடிப்புக்கொள்கை என்கின்றனர். எல்லாத் திசைகளை நோக்கியும் இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகிறது.
விஞ்ஞானிகள் தரும் விளக்கம் தமிழர்களுக்கு புதிய செய்தி அன்று. பழந்தமிழர்கள் பிரபஞ்சம் குறித்துச் சிந்தித்து வெளியிட்ட கருத்துகளை ஒப்பிட்டு பார்த்தால் அறிவியல் மேலோங்கிய பழந்தமிழ் அறிஞர்களின் பெருமை புலப்படும்.

siragu iyarpiyal1ஞாலம்

ஞாலம் என்றால் உலகம் என்று பொருள். இந்தச்சொல் ‘ஞால்’ என்னும் சொல்லடியிலிருந்து தோன்றியதாகும். ஞான் என்பதற்கு ‘தொங்குதல்’ என்பது பொருளாகும். இந்த உலகமானது எந்த பற்றுக்கோடும் இல்லாமல் அந்தரதத்தில் தொங்கிக்கொணடு இருப்பதால் உலகத்தை ‘ஞாலம்’ என்னும் சொல்லால் தமிழர் அழைத்தனர்.

மண்புலம்

தேவநேயப் பாவாணர், மண்டலம் என்னும சொல்லே மண்புலம் எனவாயிற்று என்று கருதுகிறார். ‘மண், தலம் ஸ்ரீ மண்டலம், ஞாலம்போல வட்டமாயிருப்பது வட்டம்’ என்று பொருள் காண்கிறார். புறநானூற்றில், ‘செஞ்ஞாயிற்றுச் செலவும அஞ்ஞாயிற்று பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்’ என்னும் தொடர் காணப்படுகிறது. ‘மண்டு’ என்பதற்கு ‘வளை’ என்னும் பொருளும் இருப்பதால் நீண்டு வளைந்த வட்டப்பாதையைக் குறிக்க ‘மண்டிலம்’ என்னும் சொல்லை தமிழர்கள் கையாண்டுள்ளனர். சூரியனைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் தான் கோள்கள் இயங்கி வருகின்றன. அந்த வட்டப்பாதையைக் குறிக்கும் பழந்தமிழ் சொல்லே மண்டிலம்.

ஞாயிறு

சூரியன் தனக்கென ஒரு குடும்பத்தை வைத்துக் கொண்டுள்ளது. ஒன்பது கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. (புளுட்டோ ஒரு கிரகம் தானா? என்ற ஆய்வும விவாதமும் தொடர்கின்றன) ‘பரிப்புச் சூழ்ந்த மண்டிலம்’ என்று புறநானூறு கூறுவதன் மூலம் சூரியன் மற்ற எல்லாக் கிரகங்களையும் ஈர்க்கும் ஆற்றல் பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. ‘ஞால்’ என்றால் தொங்குதல். எவ்வித பற்றும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒன்பது கோள்களையும் இறுகப் பற்றியிருப்பதால் சூரியனை ‘ஞாயிறு’ என்று அழைத்தனர்.

செவ்வாய்

வாய் என்பதற்கு இடம் என்னும் பொருளும் உண்டு. சிவந்து இருக்கும் இடமே செவ்வாய். விண்வெளி ஓடங்களும் செயற்கைக் கோள்களும் இன்று செவ்வாய்க் கோளைப் படம் எடுத்து அனுப்புகின்றன. அப்படங்கள் தமிழரின் கூர்ந்த மதியினை மதிக்கும் சான்றுகளாக இருக்கின்றன. செவ்வாய் கிரகத்தை ‘செம்மீன்’ என்றும் தமிழர் அழைப்பர். கடல்நடுவே தோன்றுகின்ற திமிலின் மீது இடப்பட்ட விள்க்குபோலச் செவ்வாய் மீன் விளங்கும் என்று புறநானூறு பகர்கிறது.
முந்நீர் நாப்பண் திமில் சுடர்போலர்
செம்மீன் இமைக்கும் மாக விசும்புன் (புறம்-60)

விண்மீன்

விண்மீன் என்றால் நட்சத்திரம் மின்னுவதால் ‘மீன்’ என்று அழைக்கப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் காற்று மண்டலம் இருப்பதால் விண்மீன் மின்னுவது போலத் தோற்றம் அளிக்கிறது. உண்மையில் விண்மீன்கள் மின்னுவதில்லை. வான்வெளிக்குச் சென்று நட்சத்திரங்களைக் கவனித்தால் தொடர்ந்து ஒளி வீசியபடியே அவை விளங்கும் தன்மையைக் காணலாம்.
புறநானூற்றில் 229 ஆம் பாடலுக்குக் காணப்படும் உரையில் ‘நக்கத்திரம்’ என்னும் சொல் காணக்கிடைக்கிறது. நகு+அம்+திரம் என்றும் பழந்தமிழ் சொல் நட்சத்திரம் என்று திரிந்துள்ளதாகச் சொல்வர். மிகுந்த ஒளியோடு நிலைத்திருப்பது என்று பொருளாகும்.

உலகம்

உலவு என்னும் சொல்லின் அடியாக ‘உலகம்’ உருவானது. சுற்றுதல் என்பது பொருளாகும். சூரியனைச் சுற்றி வருவதால் ‘உலகம்‘ என்று வழங்கப்படலாயிற்று.

நாள்மீன் கோள்மீன்

மீன் என்பது மின்னக்கூடிய ஒன்றை குறிப்பதாயினும் நாண்மீன் (நாள்-மீன்) என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். நட்சத்திரங்கள் வேறு கோள்கள் வேறு என்று அறிந்து கொண்டமையை இச்சொற்கள் தெளிவாக உணர்த்துகின்றன. சூரியனின் ஒளியைக் கொள்வதால் ‘கோள்’ என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்வர்.
வான் மண்டலத்தை மிக நுட்பமாகக் கண்டுணர்ந்ததால் தான் மகச் சிறந்த சொற்களை உருவாக்க முடிந்தது. தொல்காப்பியர், ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று குறிப்பிடுவார். மேலே விளக்கிய சொற்களை ஆழ்ந்து நோக்கினால் ‘வானியல்’ ஆய்வறிஞர்கள் நிறைந்த நாடாகப் பழந்தமிழகம் இருந்திருக்க வேண்டும என்ற முடிவிற்கு வரலாம்
புறநானூற்றின் 30 ஆவது பாடல் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாக இருக்கிறது.
செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
. . . . . . . .
. . . . . . . .
. . . . . . . ஊரே’
வான்வெளியையும் ஞாயிற்றின் இயக்கத்தையும் விளக்கும் பாடல் இது. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவரின் செய்யுள் இது.
‘ செஞ்ஞாயிற்றினது தீயும் அஞ்ஞாயிற்றினது . . . . . . .
. . . . . . கல்வியை உடையோகும் ஊர்.
இப்பாடலின் கருத்தால் பெறக்கூடிய செய்திகளாகக் கீழ்க்காண்பனவற்றைச் சுட்டலாம்.

siragu iyarpiyal3

1. வான்வெளியினைப் பற்றிய பரந்த அறிவினைப் பழந்தமிழர் பெற்றிருந்தனர்
2. வான்வெளிக்கே சென்று அளந்து வந்தவர்போல’ அன்று சொல்வதால் வான்வெளிக்கும் போய் வந்தோர் இருந்துள்ளனர்.
3. வானியல் தொடர்பான கல்வியைக் கற்பித்தும் வந்துள்ளனர்.
புறப்பாடலின் கருத்தை கூர்ந்து நோக்கும்போது பழந்தமிழர்கள் வான்வெளியில் பயணம் செய்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும், புறநானூற்றின் (பா.27) ‘வலவன் ஏவா வானூர்தி’ என்னும் தொடர் காணப்படுகிறது. ‘பாகனால் செலுத்தப்படாத விமானம்’ என்று பழைய உரை விளக்கம் தருகிறது.
இன்று செயற்கைக் கோள்கள் அனுப்பப்படுவதைப்போல அன்றும் விண்கலம் ஒன்றை அனுப்பியிருக்கலாம் என்று எண்ண இத்தொடர் இடம் தருகிறது.
கரிய வானிடைக் கூரிய பார்வையைச் செலுத்தியிருப்பதால் தான் விண்வெளியைப் பற்றிய தெளிவான செய்திகளை புலவர்கள் தாங்கள் பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.
‘வரிது நிலைஇய காயமும்’ (புறம்-30) என்று கூட்டியுள்ளமை, ‘வானத்தில் காற்றில்லாப் பகுதி உண்டு. என்பதை அக்காலத்தினர் ‘காற்றையும் கடந்து நிற்பது வானம். ‘வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் (36513) என இது காட்டப்பெறுகிறது.
சமணமும் பௌத்தமும் தமிழகத்தே தலைத்தெழுந்த கால கட்டங்களில் (கி.பி.100-500) தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறள் முழுக்க முழுக்க அறிவியல் நூலாகும்.
‘அகர முதல எழுத்தெல்லாம்’ (குறள்-10 ஆதிபகவனான சூரிய மண்டலம் முகிழ்த்த நாள் தொட்ட உலகில் தோன்றிப் பரிணமித்தன எனலாம். ‘மலர் மிசை ஏகினான்’(குறள்-3) என்பது கூட நமது அண்டமாகிய ஆகாய கங்கை எனும் பால்வீதி உடுக்கணத்தின் விளிம்பால் இயங்கி வரும் சூரியக் குடும்ப நாயகனைத் தானே.
‘கோள்இல் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை’ (குறள்-9)
புதன் (குஜன்), வெள்ளி (சுக்கிரன்), செவ்வாய்(படிமகன்), வியாழன்(குரு, அந்தணன்), சனி(இறையமன்), ராகு (பாம்பு)கேது இவற்றுடன் திங்களையும் சேர்த்து எட்டுக்கோள்களும் முறையே சிறுமம், ஓளிர்வு, செம்மை, பருமம், தலைமை. தீமை, இருள், குளிர்ச்சி ஆகிய எண் குணங்களின் பிரதிநிதிகள், இவற்றின் இயக்குநரான சூரியனை ‘ஞாயிறு போற்வுதும்’ என வழிபடுவதும் காப்பிய மரபு.
முதல் நாள் ஒளியைப் படைத்த தேவன் மறுநாள் நீரைப் படைத்ததாகவே உலகின் பல வேதங்களும் புராணங்களும் கூறுகின்றன. உலகப்பொதுமறையாம், திருக்குறளும் ஒளிப்படைத்த ஞாயிறு வாழ்த்தினைத் தொடர்ந்து வான்மழைச் சிறப்யையே வகைப்படுத்துகிறது.
தவிர, ஆடு, எருது, இரட்டையர், நண்டு, சிங்கம், தேவதை துலாக்கோல், தேள், அம்பு, கடலாழி, குடம், மீன் ஆகிய உருவங்களில் அமையும் உடுக்கணங்களான பன்னிரண்டு இராசிகளின் வழியே சஞ்சரிக்கும் சூரியனோடு முரண்பட குளிர்விளங்கும் சந்திரனாகிய ‘செல்வனொடு நிலை இய உரோகிணி’ யை நினைத்துத் தன்னிலைக்கு இரங்கும பாண்மாதேவி நிலையை நக்கீரர் நெடுநெல்வாடையில் சித்திரிக்கிறார்.
‘வானூர் மதியம் சகடணைய வானத்து
சாலி ஒருமீன் தகையாளைக்கோவலன்’
(சிலம்பு-மங்கல வாழ்த்து-50-50)
மணம்புரிவதாகப் பாடுகிறார் இளங்கோ அடிகள். சந்திரன் 2 ரோகிணி (சகடம்) இணைகின்ற நாளில் சாலினி மீனாகிய அரந்ததி ஒத்த கண்ணகியைக்கோவலன் மன்றல் புரிந்ததாக வரலாறு.
வடதிசையின் சப்தரிஷி மண்டலத்தின் பெருங்கரண்டி அல்லது பெருங்காடி வடிவ உடுக்கணத்தில் வால் நுனியிலிருந்து இரண்டாவதான ‘மிசார்’ எனும் வசிட்ட விண்மீனை நெருங்கியுள்ள அல்கோர் எனும் அருந்ததி விண்மீனே’ கடவுளொடு மீன் சாலினி’ (பரிபாடல்-5-44) என்றும், ‘விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன்’ (பதிற்றுப்பத்து 31-28) என்றும் சங்கத்தமிழர் வியந்து போற்றினார்.
‘கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்’
(சிலம்பு –நாடுகாண்காதை 102-103) வற்றாது காவிரி என்பது இளங்கோ கூற்று, இங்கு கரியவன் -சனி, புகைக்கொடி தூமகேது, வால்விண்மீன் எனினும் இந்த இடத்தில் வெள்ளி என்பது வடதுருவ விண்மீனையே சுட்டுவதாகும். சுக்கிரனை அன்று, பெருங்கரண்டி வடிவ சப்தரிஷி மண்டல முனை விளிம்பின் இரண்டு விண்மீன்களை இணைக்கும் நேர்கோடு சுட்டும் திசையில் அடிவானில் தோன்றும் போலாரிஸ் விண்மீனே இன்று நம் வடவிண்மீன்கள்.
இங்ஙனம், சமண, பௌத்தக் கொள்கைகளினுடே பழந்தமிழர் வாழ்வியல் நுட்பங்களும் சங்கம் மருவிய கால கட்டங்களில் அறியக் கிடக்கின்றன. தவிர கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கவிச் சக்கரவர்த்தி கம்பர் மறு பெயர்ப்பாக்கம் புரிந்த இராமாயணக்கதையிலும் வானத்தில் சஞ்சரிக்க வல்ல எந்திரத்தேர் பற்றிய தொழில் வட்டச் சிந்தனைகள் அநேகம்.
‘வானவூர்தி யிலேறிக் கோவலுடன் விண்ணில் எழுந்து மறைந்தாள் கண்ணகி என்பார் இளங்கோ அடிகள்.
தேவாரத்திலும் , ‘போர் அரக்கண் புட்பகம்’ (6-12-10) ஏனும் விமானம் மலைமீது ஓடாததைப் பாடுகிறார் அப்பர்.
பொறிவலம் திருகிட விண்ணிலேறி, பொறி இடம் திருகிட தரைமயிறங்குமாறு ‘எந்திரவூர்தி‘ (235) மயில்வடிவில் தயாரிக்கப்பட்டதாகத் திருத்தக்கதேவர் சிந்தாமணியில் சித்திரிக்கிறார்.
‘வித்தக அணி வேண்டவயின் முருக்கி விண்ணகத்(து) இழிந்து விமானம் ஏறி’ (133-194) பிறந்த உதயணன், யூகி ஆகியோர் பயணத்தை விவரிக்கிறார். பெருங்கதை ஆசிரியர் கொங்குவேள்.
கம்பராமாயணத்திலும் புட்பக விமானம்- எந்திர தேர் (ஆரண்ய காண்டம், சடாயு உயிர் நீத்தப் படலம் 3508) பற்றிய செய்திகள் பலப்பல.
சோழர் ஆட்சிக்காலத்தில் எந்திரத்தொழில் நுட்பங்கள் சிறப்புற்றிருந்தன. வானில் கோள்கள் பற்றிய அளவு வேளாண்மைக்குத் தேவைப்பட்டது. பருவக்காலத்தைக் கணக்கிட்டு இத்தொழிலில் ஈடுபட்டனர். நாள்மீன், கோள்மீன் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. ஞாயிறு பூமியைச் சுற்றுவதாக அன்று கருதப்பட்டதால் ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு ஞாயிறு’ என்று நக்கீரர் பாடினார். (திருமுருகாற்றுப்படை) இது புவிமையைக் கொள்கை எனப்பட்டது. தற்போது பூமி சூரியனைச் சுற்றிவது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வீட்டு முற்றத்தில் ஆட்டுக்கிடாயுடன் சிவலைப் பறவை விளையாடுவது நாள் மீனோடு கோள்மீன் விளையாடுவதை ஒக்கும் என்கிறது பட்டினப்பாலை (67-77)
‘நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு. . . . . விளையாட
இந்த மீன்களின் தோற்றம், மாற்றம், மறைவு, குறித்து பல நம்பிக்கைகளும்-இன்று இராசிபலன் பார்ப்பது போல இருந்தன. புறநானூறு 229 ஆம்பாட்டு, இந்த மீன்களின் மாற்றத்தால் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறக்கக்கூடும் என்று கூறுவதாக அமைகிறது. மேடம், கார்த்தினை, அனுடம், புனர்பூசம், இடபம், சனி முதலியவற்றுக்கு நிகராக ஆடு, அழற்குட்டம், முடப்பனை, குளவடிவு ஏறு, மைம்மீன் முதலிய வழக்குகள் இடம்பெற்றன. தமிழரின் வானியல அறிவு பற்றி விளக்கமாக முனைவர் பெ. துரைசாமி தனது நூலில் கூறியுள்ளது கருதத்தக்கது.

‘அகர முதலின் எழுத்தாய் நின்றாய்’ (7:3:7) என்கிற சுந்தரரின் ஏழாம் திருமுறைக்கும் திருவள்ளுவர் கண்ட ஆதி (த்த) பகவானுக்கும் தொடர்பிருக்கலாம். ‘பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ (குறள் -319) என்பது ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு’ என்கிற நியூட்டன் இயக்க விதியல்லவா? சுந்தரரும்
‘செற்றொருவரைச் செய்த தீமைகள்
இம்மையே வரும் தீண்ணமே’
என்பார்.
‘ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே’ (பாடல்-30) என்கிற சிவவாக்கியர் பாடல் ஆற்றல் அழி மாதத்தன்மை ஆகிய இயற்பியல் விதிகளின் முழக்கம் தானோ?
‘உடலுக்கும் உயிரும் போல் உட்கலந்து நின்றான்டி’(பாடல்-77) என்கிற அத்வைதமே ஐன்ஸ்டீனின் பொருண்மையும் ஆற்றலும் இணைந்த பொதுச்சார்பியல் கோட்பாடு என்று வேண்டுமானாலும் விளக்க முற்படலாம். உடலின் அற்றல் வடிவம் உயிர், உயிரின் பொருள் வடிவமே உடல்’
‘விரிந்த குவிந்து விளைந்த’ எனப்பாடும் திருமூலர் கருத்து இந்தப் பிரபஞ்சம் 29000 கோடி ஆண்டுகள் விரிவடைந்தும் பின் 41000 கோடி ஆண்டுகள் சுருங்கவும் செய்யுமென்கிற இன்றைய ‘துடிக்கும் பிரபஞ்சக் கோட்பாடுடன் ஒத்துப்போகிறது. டாக்டர் ஆலன் சாண்டேஜ் கணிதப்படுத்திய அறிவியலுக்குத் தத்துவார்த்த முன்னோடி திருமூலர் தானே!
ஆயின் தொழில் நுட்ப முன்னேற்றங்களைப் பொருளாய அடிப்படையில் வியந்துபாடும் உலோகாயதச் சித்தரின அறிவியல் பார்வை இது
‘மாறிக்கொண்டிருப்பது மாளா இயற்கை-தன்
. . . . . . . . . . . . . முடிவில்’

‘காலங்கள் மாறிடும் காலங்கள் தோறும்-உள்ள
கடவுள்களின் மதவேரும் பேரும்’

‘அறியாமை அச்சம் தவறுகள் யாவும்- உலகில்
. . . . . . . . . . கொடுத்தனர் தொல்லை.

‘ஆன்மா என்பதும் பொய்யின் கற்பனை –வெறும்
ஆத்திகம் என்பதும் தன்னல விற்பனை’

கோள் நிலைகள்

siragu iyarpiyal2

வருகெழு வெள்ளிவந் தேற்றியல் செர . . . . . . . (பரிபாடல்11-4-13)
கோள்கள் மழை பொழிவதற்கு ஏற்ற நிலையில் இருந்ததாக ஆசிரியர் பாடலைத் தொடர்கிறார்.
பாடலின் வரிகளை நுணுகி ஆய்ந்த கோள்கள நிற்கும் இராசி நிலைகளைக் கொண்டு இந்தப்பாடல் பாடப்பெற்ற காலம் எது என்று கண்டறிய முடியும். பரிமேலழகர் உரையுடன் பரிபாடலை உ.வே. சா. பதுப்பித்துள்ளார். அவ்வுரை நூற்பொருளை அறியப் பெருமளவில் உதவுகிறது.
பரிமேழகரின் உரை கொண்டு இப்பாடலின் பொருளை முதலில் காண்போம்.
‘நிறத்தையுடைய வெள்ளி இடபத்தைச் சேரச் செவ்வாய். . . . . மதிய மறையும்படி
வருநாளின் கண்
கடல் வற்றுமா?
தொடர்ந்து சில ஆண்டுகள் மழை இல்லா தொழியுமானால் குளம், குட்டை, ஏரி போன்றவை வற்றுகின்றன. ஆறுகளும் வற்றுவதுண்டு. கடல் வற்றுமா? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
நெடுங்கமலும் தன் நீர்மை குன்றும் தடிந்தொழிலா
தான்நல் காதாலி விடின்
என்கிறார் குறளாசான்,
‘மழை பொழியவில்லை என்றால் கடல்கூட வறண்டு குறைந்துவிடும் என்பது பொருள் இக்குறட்பாவின் இரண்டு கருத்துகளை ஆழ்ந்து நோக்க வேண்டும்.

1. நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்
2. தடிந்தெழிலி தான் நல்காதாகி விடின்

கடல், ஆறு, ஏரி போன்ற நீர்ப்பகுதிகளிலிருந்து ஆவியாகிப்போகும் நீராவி விண்ணிற் சென்று மீண்டும் குளிர்ந்து மழையாக பொழியும்’ என்பது எல்லோர்க்கும் தெரிந்த செய்தி. இருப்பினும், முதற்கேள்வி மழை மேகம் மழை தராது போகுமா? என்பதேயாகும். (விண்ணிற்குச் செல்லும் நீராவி நீர்திவலைகளாக மாறியும் மழை பொழியாமல் போக வாய்ப்பு உண்டா?) வள்ளுவர் ‘தடிந்தெழிலி’ என்னும் பதத்தைப் பயன்படுத்துகிறார். எழிலி என்பது மேகம். தடிந்தெழிலி என்பதால், ‘நீருள்ள மேகம்’ என்று பொருள். நீரைச் சுமந்து கொண்டுள்ள மேகம் மழை தராது போவதுண்டா என்றால் அறிவியல் ‘ஆம்’ என்று பதில் தருகிறது.

இதனை வானியலார் ‘விர்கா’ என்பார்கள். விழும் மழையானத பூமியைத் தொடுவதற்கு முன்பே ஆவியாகிப்போகும். இதனையே, ‘தடிந்தெழிலி தான் நல்காதாகி விடின்’ என்றுரைக்கிறார் வள்ளுவனார்.

அடுத்த மிகப்பெரிய கேள்வி’கடல்நீர் வற்றுமா’ என்பதுதான் அறிவியல் நோக்கில் கூற வேண்டுமானால் கடல்வற்றவும் வாய்ப்பிருக்கிறது.
நீராவி மேகமாகி, பின் குளிர்ந்து மழை பொழிகிறது. மழை பொழிய புவியீர்ப்பு விசையும் ஒரு காரணம் என்றால் தவறு இல்லை. ஈரப்பு விசை இல்லையெனில் பின் மழைத்துளி பூமியில் எப்படி விழும்?

ஆயினும், சில நேரங்களில் காற்றின் மூலக் கூறுகளும் நீராவியும், பவியீர்ப்பு விசையையும் எதிர்த்து விண்வெளிக்குத் தப்புவதுண்டு. தொடர்ந்து இதேபோன்று நிகழ்ந்து வந்தால் பூமியில் மழை வளம் குறைய வாய்ப்பு உண்டு. கடலிலிருந்து வெளியேறும் ஆவி இப்படி தப்பிச்சென்றால் கடல் குன்றவும் கூடும்.

விஞ்ஞானிகள் வேறு வகையாகவும சொல்கிறார்கள். உலகத்தில் வெப்பம் கூடிக்கொண்டே போகிறது. உயிரினங்கள் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் கூடினால் மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும அழியும் அதி வெப்பத்தினால் கடல் வற்றலாம்.
ஒராண்டிற்கு 92,000,000,000,000,000 கேலன்கள் கடல்நீர் ஆவியாகிறது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

உடனடியாக கடல் வற்றிவிடும் என்று அறிவியல் அறிஞர் அச்சுறுத்தவில்லை. மெதுவாக மெல்ல, மெல்ல, கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து (மேற்கூரிய முறையில்) நிகழ்ந்தால் வற்றலாம். இப்படி நிகழ ஒரிரு கோடி ஆண்டுகள் ஆகலாம். எப்படியிருப்பினும் தொடர்ந்து மழையே பொழியாமல் இலட்சக்கணக்கான ஆண்டுகள் கழியுமானால் சாத்தியம் இருக்கிறது.

வேறு வகையிலும் அறிவியல் அறிஞர் இந்தச் சாத்தியக் கூறினைக் கூறுகின்றனர். சூரியனிலுள்ள வாயுக்கள் தீர்ந்து போகும் நிலையில் அது மிகப்பிரகாசமாக எரியும் சூரியனும் தன் அளவில் பெரிதாகும். அப்போது எற்படும் வெப்பத்தில் கடல் வற்றும். பூமியும் சூரியனின் ஈர்ப்பு விசையில் ஐக்கியமாகிவிடவும் வாய்ப்புள்ளது.

எதுவாயினும் பொய்யில் புலவன் பொய்க்கவில்லை என்பது மட்டும் உண்மை. மழைமேகம் பொழியாமல் போகலாம். கடலும் வற்றலாம் அறிவியல் பார்வையில் சாத்தியம் இருக்கிறது.


கி. கிருஷ்ண குமார்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இயற்பியல்”

அதிகம் படித்தது