மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இரட்டை இலை சின்னம்: டிடிவி தினகரனிடம் மூன்றாவது நாளாக விசாரணை



Apr 24, 2017

தேர்தல் ஆணையத்திடமிருந்து இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகர் மூலமாக பணம் கொடுக்கப்பட்டதாக அதிமுக-வின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Siragu dinakaran1

இதனையடுத்து டெல்லி போலீசார் சென்னை சென்று டிடிவி தினகரனிடம் 22ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.

பின் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அன்று ஏழு மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. நேற்றும் பத்து மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இன்றும் டிடிவி தினகரன் மாலை 4 மணியளவில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரட்டை இலை சின்னம்: டிடிவி தினகரனிடம் மூன்றாவது நாளாக விசாரணை”

அதிகம் படித்தது