மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: மேலும் ஒருவர் கைது



May 18, 2017

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் வழங்கியாதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டு, பின் டிடிவி தினகரன், இவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Siragu admk

இவர்கள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் மே 15 வரையிலும், சுகேஷுக்கு மே 11 வரையிலும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து டெல்லிக்கு ஏஜெண்டுகள் மூலமாக சுகேஷுக்கு பத்து கோடி ரூபாய் கைமாறியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நரேஷ் என்ற ஹவாலா ஏஜெண்ட் கைது செய்யப்பட்டார். மேலும் தாய்லாந்திலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த மற்றுமொரு ஏஜெண்ட்டும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று பாபு பாய் என்ற ஹவாலா ஏஜெண்ட் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: மேலும் ஒருவர் கைது”

அதிகம் படித்தது