மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இருத்தலியல் நோக்கில் என் கணவரின் கனவுக் கன்னி

சி. சதிஷ்

Dec 18, 2021

siragu en kanavarin kanavukkanni1

என் கணவரின் கனவுக் கன்னி என்னும் சிறுகதை 2006-ல் விகடன் இதழில் வெளியானது. விகடன் இதழில் வெளியான சிறுகதைகளைத் தொகுக்கப்பெற்றப்போது 2006 விகடன் சிறுகதைகள் எனும் தொகுப்பில் இடம் பெற்றது. இந்த சிறுகதையின் ஆசிரியர் கிருஷ்ணா ஆவார். இக்கட்டுரை என் கணவரின் கனவுக் கன்னி என்னும் சிறுகதையை இருத்தலியல் நோக்கில் எவ்வாறு பார்க்கலாம் என்பதையே எடுத்துரைக்கிறது.

கதைச்சுருக்கம் (என் கணவரின் கனவுக் கன்னி):

கதையின் மையக் கதாப்பத்திரமாக பானு உள்ளார். பானு கணவரின் மாமா பேத்தி திருமணத்திற்குச்சென்ற போது நடக்கும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வே இந்தச்சிறுகதையாக அமைகின்றது.

பானுவின் கணவர் பானுவைக் கூப்பிட்டு நான் தெருமுனையில் இருக்கும் கடைக்கு சென்று வருகிறேன் என்கிறார். உடனே பானு எதற்கு என்று தெரியும், அது எல்லாம் ஒன்றும் வேண்டாம். உங்களைப் பற்றி தெரியாதா! என்கிறார். அப்படிபானு கூறியதும் பானுவின் கணவர் சற்று நேரம் கழித்து பானுவை கூப்பிட்டு என்னைப் பற்றி என்னமோ தெரியும் என்றுச் சொன்னாயே என்னத் தெரியும் என்கிறார். பானு உடனே 25 வருஷமாக உங்களுடன் குப்பைக்கொட்டுகிறேனே! தெரியாதா என்கிறார். அப்படி என்றால் ஒரு பந்தயம். எல்லா ஆண்களுக்கும் திருமண வயதில் ஒரு ஆசை இருக்கும். தனக்கு வரப்போகும் மனைவி இப்படி தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு பிம்பம் இருக்கும். எனக்கும் அப்படி ஒரு பிம்பம் இருந்தது. அவளை ஒரு நாள் நான் நேரில் பார்த்தேன், பார்த்ததும் அசந்து போனேன், அவள் இன்று இந்த திருமணத்திற்கும் வந்துள்ளாள். உன்னால் முடிந்தால் கண்டுபிடி அதுவும் ஒரு மணி நேரம் தான் உனக்குக் கால அவகாசம் என்கிறார்.

பானு உடனே சட்டென்று எழுந்து யார் அந்த ரதி என்று பார்க்கிறேன் என்று உடனேத் தேட ஆரம்பித்தாள். அப்படிப் பார்த்தால் திருமணத்தில் இருப்பவர்கள் அனைவரும் உறவினர் மட்டும் தான், எண்பது பேர் தான் இருப்பார்கள். இதில் இவர் வயதிற்கு ஏற்றவர் என்றால் நாற்பத்து ஐந்து வயதிற்கும் மேல் உள்ளவர்கள் தான். அதிலும் இவரின் ரசனைக்கு ஏற்றவர் என்றால் ஒரு பத்து பேர் தான் அதிலும் கழித்தால் இன்னும் சொற்ப பேர்தான் எளிமையாக கண்டுப்பிடித்துவிடலாம் என்று பானு என்னுகிறாள். அப்படி பார்த்தால் சுருள் முடி, பெரிய முக்கு, பெரிய காது, சதை போட்ட உடம்பு என்று கழித்தார். ஒருவர் மட்டுமே எஞ்சினார். ஆனாலும், சந்தேகம் உடல் பருமனைத் தவிர்த்து மற்ற எல்லாமே ஒன்றுகிறது, ஒருவேளைத் திருமணத்திற்கு முன்பு உடல் பருமன் இல்லாமல் இருந்திருக்கலாம், என்று சற்று உற்று நோக்குகிறார். இந்த வேளையில் மாப்பிள்ளையின் தங்கை பானுவிடம் ஏன் எங்க பெரிய அம்மாவை அப்படி பார்க்கிறீர்களே என்கிறாள். அது எல்லாம் ஒன்றும் இல்லை என்கிறார் பானு.

பின்னர் மாப்பிள்ளையின் தங்கை இவ்வளவு பருமனாக இருக்கிறார்களே இவர்களுக்கு எப்படி திருமணமானது என்றுத் தானே, எங்க தாத்தாவும், பாட்டியும் அப்படித்தான் கவலையோட இருந்தார்களாம். அப்புறம் ஒரு பெரிய பணக்கார பிசினஸ்மேன் திருமணம் செய்தால் உடல்பருமனானப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் கொண்டு திருமணம் செய்தார்களாம். பானுவும் அந்த மாப்பிள்ளை யார் என்று சற்று திரும்பிப் பார்த்தார். பெரியம்மாவுக்கு சற்றும் சலிக்காத பெரியப்பா தான் என்று பார்த்து வியந்தார். இந்த நிகழ்வு நடந்து முடிந்ததும் நேரம் பார்த்தால் இன்னும் ஐந்து நிமிடம் மட்டுமே அவகாசம் இருந்தது. ஒருவேளை தோற்றுவிடுவேனோ என்று பானு பதட்டப்படுகிறார்.

மீண்டும், பானு தான் கணவரின் மீதுக் கவனத்தைத் திருப்புகின்றார். ஏனேன்றால் ஆண்களுக்கு தான் வயது வித்தியாசம் இல்லாமல் பார்ப்பார்களே என்றுஎண்ணிப் பார்த்தால்இவர் உறங்கிக் கொண்டு உள்ளார்.

இந்த நேரத்தில் பானு கணவரின் அக்கா வந்து என்ன மசமசன்னு நிக்கிற போய் சீக்கிரம் ரெடியாகு போ.., போ.., என்று விரட்டியதும் பானுவும் தன் பை உள்ள அறைக்கு வந்து முகம் கழுவுகிறாள். முகம் கழுவும் போது தன் பிம்பத்தை கண்ணாடியில் அந்நிய மனுசிப் போன்று பார்க்கிறார். அப்படிப் பார்க்கும்போது பானு தன் கணவரின் ரசனைகளை ஞாபகப் படுத்திப் பார்க்கிறார். அவ்வாறு பார்க்கும் போது சிறிய மூக்கு,சிறிய காது, பெரிய கண்ணு, சிறிய நெற்றி, சதை போடாத உடம்பு, நீளமான முடி என்று இவள் கணவரின் ரசனையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார். அப்படி பார்க்கும் போது தன் கணவரின் ரசனைகளுக்கு ஏற்றவள் தான்தான் என்று சந்தோஷப்படுகிறார். தயாராகி வந்ததும் தன் கணவரின் முன்பு வந்து நிற்கிறார். தூக்கத்திலிருந்து விழித்த பானுவின் கணவர் கண்டுபிடித்து விட்டாய் போல் என்றதும் பானு நாணம் கொள்கிறாள். அவ்வாறு நாணம் கொள்ளும் போது 25 வருடத்திற்கு முன்பு இதே போன்று உன்னை பெண் பார்க்க வந்த அன்று என்னை பார்த்து நீ எவ்வாறு நானும் கொண்டாயோ அந்த நாணம் இன்றும் வெளிப்படுகிறது என்றார். பானு, பானுவின் கணவர் இருவரும் சத்திரத்தில் திருமண நிகழ்வில் உள்ளோம் என்பதையும் மறந்து தம்மை சுற்றி ஆட்கள் இருப்பதையும் மறந்து சிரிக்கின்றனர். இவ்வாறு இந்த கதை நிறைவுபெறுகிறது.

இருத்தலியல் தத்துவம்:

இருத்தலியல் என்பது ஓர் சமூகம் பற்றிய தத்துவம் ஆகும். ஒரு சமூகத்தில் உள்ள ஒரு மனிதரை மட்டுமே உயர்வு படுத்திக் காட்டுவது இருத்தலியலின் அடிப்படைத் தத்துவமாகும்.

இருத்தலியலின் அடிப்படைத் தத்துவம் என்னவென்றால் ஓர் தனி மனிதனை சமூகத்தில் உயர்வு படுத்திக் காட்டுவது. அவ்வாறு உயர்வுப் படுத்திக் காட்டும் போது அந்த மனிதரின் தனி மனித குணங்கள், பண்புகள், பொறுப்புகள், எண்ணங்கள் என எல்லாவற்றையும் எடுத்து விளக்குவது ஆகும். இருத்தலியலின் பண்புகள் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய கட்டுப்பாடுகள் மற்றும் பண்புகள் இருந்தாலும் வளர்ச்சி என்னும் பாதையில் நிறைய மாற்றங்களை இருத்தலியல் தத்துவம் அடைந்தது எனலாம்.

இருத்தலியல் நோக்கில் கதை விமர்சனம்:

இருத்தலியல் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு என் கணவரின் கனவுக்கன்னி என்னும் சிறுகதையை பார்க்கும் பொழுது கதையின் மையமாக உயர்ந்து நிற்கும் கதாபாத்திரம் பானு. இந்த பானு என்ற கதாபாத்திரம் திருமணம் ஆகி இருபத்தி ஐந்து வருடம் தன் இல்லற வாழ்வை நடத்தி வருகிறது. இந்த 25 வருடங்களில் சந்தோஷமான ஒரு வாழ்வையே வாழ்கின்றார் பானு கணவரின் மாமா பேத்தி திருமணத்திற்காக சத்திரத்தில் இருக்கும்பொழுது பானுவின் கணவர் கூப்பிட்டு நான் தெருமுனையில் இருக்கும் கடைக்கு சென்று வருகிறேன் என்றதும் பானு தெருமுனையில் இருக்கும் கடைக்கு சென்றால் இவர் புகை பிடிப்பார் என்று, இவர் உடல் நலத்தைப்பேணி இவரை அந்த கடைக்கு செல்லாமல் தடுக்கிறார் பின்னர் தன் அருகில் வர சொன்ன தன் கணவரின் வார்த்தைக்கு மரியாதை அளித்து அவரின் பக்கத்தில் உள்ள நாற்காலியில் அமர்கிறார்.

அப்படி, அமரும்போது இவர் எல்லா ஆண்களுக்கும் திருமண வயதில் இருக்கும் பொழுது தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு பிம்பம் இருக்கும், அப்படி ஒரு பிம்பம் எனக்கும் இருந்தது. நானும், அந்த ஒரு பிம்பத்தை ஒருநாள் நேரில் பார்த்தேன் நேரில் பார்த்ததும் வியந்து, திகைத்து, நின்றேன் அந்தப் பிம்பம் இந்த திருமணத்திற்கும் வந்துள்ளது என்கிறார். ஒரு சாதாரண பெண் போன்று பானுவும் அந்த நேரத்தில் இருந்திருந்தால் அந்த இடத்திலேயே அவர் பிரச்சினையை உருவாக்கி இருப்பார்.பானு பக்குவப்படாமல் இருந்திருந்தால் பானுவின் கணவரும் இந்த பிம்பம் இருந்தது, என்பதை பானு இடத்தில் சொல்லியிருக்க மாட்டார். பானு வயதில் மட்டுமல்ல மனதளவிலும் பக்குவப்பட்டவர் ஆவார் உளவியல் அடிப்படையில் பார்த்தால் அவர் நல்ல பக்குவப்பட்ட ஒரு நல்ல இல்லாளாக உள்ளார்.

பின்னர், பானு தன் கணவரின் அந்த பிம்பம் யார் என்பதை தேடுகிறார். அவ்வாறு தேடும்போது அந்தச் சத்திரத்தில் ஒரு 80 பேர் உள்ளார்கள். அதில் பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என்று பிரித்துப் பார்த்தால் இவருக்கு முறை வருபவர்கள் சிலரே உள்ளார்கள் அதிலும், இவரின் ரசனைக்கு ஏற்ப உள்ள அந்தப் பெண் யார் என்பதை பார்க்கிறார். அவ்வாறு, பார்க்கும்போது இவரின் ரசனையைச் சற்று ஞாபகப்படுத்தி பார்க்கிறார். சதைப் போட்ட உடல் என்றால் கிண்டல் செய்வார். சிறிய கண் என்றால் அதற்கும் ஏதேனும் கிண்டல் செய்வார் பெரிய நெற்றி, சிறிய காது இது எல்லாம் இவரின் ரசனைக்கு ஏற்காதது.

பின்னரும் ஒரு பெண் மட்டும் தேர்வு ஆகிறார். அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கும் போது மாப்பிள்ளையின் தங்கை வந்து ஏன் எங்க பெரியம்மாவை, அப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என்று பானு சமாளிக்கிறார். அவ்வாறு பானு கூறும்போது மாப்பிள்ளையின் தங்கை எங்க பெரியம்மா இப்ப மட்டுமில்ல சின்ன வயசுல இருந்தே உடல் பருமனாக தான் இருந்தார்களாம், உடல் பருமனாக இருப்பதால் இவரை எவ்வாறு திருமணம் முடித்து வைப்பது என்று தாத்தாவும், பாட்டியும் கவலை கொண்டு இருந்தார்கள் ஆம் அவ்வாறு இருக்கும் போது ஒரு பெரிய பணக்கார பிசினஸ்மேன் வந்து பெண் கேட்டு திருமணம் செய்தால் உடல் பருமனான பெண்ணையே திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் கொண்டு மணம் புரிந்தராம் அப்படி மாப்பிள்ளையின் தங்கை கூறியதும் பானு உங்க பெரியம்மாவிற்கு ஏற்ற அந்த பெரியப்பா யார் என்பதை கேட்கிறார். அப்படி, கேட்கும்போது அந்த பணக்கார பிசினஸ்மேனைப் பார்க்கின்றார்.

பெரியம்மாவிற்கு சற்றும் உடல் அளவில் குறைவில்லாத பெரியப்பாவாக அந்த பிசினஸ்மேன் உள்ளார். இதனை உளவியல் அடிப்படையில் பார்க்கும் பொழுது பெண்களின் திருமண வயதின் போது பெண்கள் எப்பொழுதும் உடல் இளைத்து ஒரு நல்ல வடிவத்தில் தனது உடலை அழகுபடுத்தி வைத்திருந்தால் மட்டுமே பெண் பார்க்கும் போது மாப்பிள்ளை வீட்டார், பெண் நன்றாக உள்ளார் என்பதை நாம் இங்கு நினைவு கூற வேண்டும். அப்படி இருக்கையில் உடல் பருமனான பெண்களுக்கு இன்றும் திருமணமானது தடைப்படுவதை நம்மால் பார்க்க இயலுகிறது. இவ்வாறான சூழலில் பானு தனது ஒரு மணி நேரத்தில் இன்னும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே மீதம் வைத்துள்ளார். பின்னர், பானு தன் கணவரின் அக்காவின் சொல்லிற்க்கு அடிப்பணிந்து அவர் கூறியது போல் பெண் அழைப்பிற்கு நேரமாகிவிட்டது. வேகமாக தயாராகி வா என்றுக்கூறியதும் பானுவும் தனது மாற்று துணி உள்ள அறைக்கு செல்கிறாள். அப்படி சென்று பெண் அழைப்பிற்கு தயாராகிறார்.

பானு தயாராகும் போது முகம் கழுவுகிறாள். அப்படி, முகம் கழுவும்போது தனது முகத்தை கண்ணாடியில் பார்க்கிறாள். கண்ணாடியில் பார்க்கும் போது தனது பிம்பத்தை அந்நிய பெண்ணின் பிம்பம் போன்று பார்க்கிறாள். அப்படிப் பார்க்கும் பொழுது இவளுக்கு அதீத வியப்பு ஏற்படுகிறது. கண்ணாடியில் தெரியும் பிம்பத்தையும், தன் கணவரின் ரசனைகளையும் சற்று எண்ணுகிறாள்.கண்ணாடியில் உள்ள பிம்பத்தை தன் கணவரின் ரசனைகளோடு ஒப்பிடுகிறார். சுருள் இல்லாத நீளமான முடி, பெரிய கண், சிறிய மூக்கு, சிறிய காது, சிறிய நெற்றி, சதை போடாத உடம்பு என்று எல்லாவற்றையும் ஆராய்கிறார். அவ்வாறு ஆராய்ந்தப்பின்னர் எல்லா ரசனையோடும் ஒன்றி இருப்பது கண்ணாடியில் தெரியும் தன்னுடைய பிம்பம் தான் என்பதை எண்ணி வியக்கிறார். மேலும், அதனை உறுதிப்படுத்தவும் செய்கிறார். இவ்வாறானமனநிலையோடு மணமகள் வரவேற்பிற்கு தயாராகிறார். தயாரான பின்பு, தன் கணவரின் முன்பு சென்று நிற்கிறார். அப்படி நிற்கும் போது அவர் தூங்கிக் கொண்டிருந்து கண் விழிக்கிறார்.

அவர் கண் விழிக்கும்போது அவர் கண்ணெதிரே நிற்கிறார். அப்படி நின்றதும் அவர் கணவர் உணர்கிறார். தன் கூறிய அந்த பிம்பத்தை பானு பார்த்துவிட்டாள். இதனை உணர்ந்தவராக பானுவிடம் நான் கூறியதை கண்டு பிடித்துவிட்டாய் போலும் என்று வியப்புடன் கேட்கிறார். அப்படி, கேட்டதும் அந்த பிம்பம் தான்தான் என்பதை உணர்ந்தவளாக பானு நகைக்கிறாள். அப்படி நகைக்கும்போது இருவரும் சத்திரத்தில் திருமண நிகழ்வில் நிறைய பேர் உள்ளார்கள் என்பதையும் மறந்து இருவரும் களீரென்று சிரிக்கின்றனர். அப்படி சிரிக்கும் பொழுது பானு தன் கணவரின் கன்னத்தை தடவுகிறார்.

பானு மணமகள் வரவேற்பிற்கு தயாரான பின்னர், தன் கணவனை வந்து பார்க்கும்போது அந்த பிம்பம் தான்தான் என்பதை அவள் சொல்லமலேயே அவள் கணவர் நான் கூறிய பிம்பம் இவள் தான் என்பதை இவள் உணர்ந்தால் என்று உணர்கிறார். அப்படி அவர் பார்க்கும் பொழுது அவர் பார்க்கும் அந்தக் குறியீடு இவ்விடத்தில் முக்கியமான ஒரு அங்கமாக அமைகிறது. பின்னர் கணவரும் மனைவியும் அவ்விடத்திலேயே சத்தத்துடன் சிரித்து மகிழ்ந்து அவ்விடத்தில் மற்றவர்கள் இருப்பதை மறக்கின்றனர். இவர்கள் மற்றவரின் திருமண வாழ்விற்கு உதாரணங்களாக உள்ளார் என்பதை நாம் இச்சிறுகதையின் வழி சமூகத்தோடும், சமுதாயத்தோடும் ஒன்றிப் பார்க்க இயலும்.

மதிப்பீடு:

«  இருத்தலியல் நோக்கில் பார்க்கும் பொழுது இருத்தலியலின் அடிப்படை பண்புகளான ஒரு தனி மனிதனின் எண்ணங்கள், குணங்கள், பண்புகள், பொறுப்புகள் போன்றவற்றை பானு தன்னிடத்தில் கொண்டுள்ளார் என்பதை இச்சிறுகதை வழி இக்கட்டுரை எடுத்து கையாளுகிறது.

«  சிறந்த பண்பு நலன்கள் உடன் பானு இந்த சமூகத்தில் மற்றவரின் முன்பு உயர்ந்து நிற்கிறார்.

«  மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இவர்களின் திருமண இல்வாழ்வு உள்ளது என்பதை நம்மால் கூற இயலும்.

«  அடுத்த தலைமுறை சந்ததிக்கு ஒரு முக்கியமான இல்லற வாழ்வினை பானு வாழ்ந்தார் என்பதனை இச்சிறுகதை மற்றும் கட்டுரை வழி நம்மால் முன்னுதாரணமாகக்காட்ட இயலும்.

«  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருத்தலியல் எனும் வரையறை பரவலாக இலக்கியங்களில் பொருத்திப் பார்க்கப்பட்டது. இதனூடாக தனிநபர்களின் வாழ்வியல் நிலைகள் குறித்து அதிகம் பேசப்பட்டது.

«  இருத்தலியல் எனும் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கும் பொழுது பானு எனும் கதாபாத்திரத்தின் வாயிலாக தனிப்பட்ட ஒருவரின் உணர்ச்சிகள், செயல்கள், இரசனைகள், பொறுப்புகள், குணங்கள் மற்றும் எண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் வெளிப்படுகின்றன.

துணைநூல் பட்டியல்:

  1. விகடன் சிறுகதைகள் 2006.
  2. https://www.vikatan.com/arts/literature/75782-
  3. https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

சி. சதிஷ்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இருத்தலியல் நோக்கில் என் கணவரின் கனவுக் கன்னி”

அதிகம் படித்தது