மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் உத்தரவு: நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்



Dec 15, 2016

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக வாகன விபத்து ஏற்படுகிறது, எனவே அவைகளை மூட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான குழு விசாரித்து வந்தது.

siragu-supreme-court

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பதால் வாகன ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுவதால் விபத்து ஏற்படுகிறது போன்ற காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகளும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் உத்தரவு: நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்”

அதிகம் படித்தது