மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் உத்தரவு: டிசம்பர் 15 வரை தமிழகத்துக்கு காவிரியிலிருந்து 2000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்



Dec 9, 2016

2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளா, கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு விசாரணைக்கு வந்தபோது இந்த மனுக்கள் மீதான வழக்கை விசாரிக்கலாமா? இல்லையா? என விவாதம் நடைபெற்றது.

siragu-kaveri-water

இந்த மனு மீதான அனைத்து வாதங்களையும் விசாரணை செய்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் டிசம்பர் 15ம் தேதி வரை காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 2000 கனஅடி திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கின் கூடுதல் உத்தரவுகளை டிசம்பர் 15ம் தேதி பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் உத்தரவு: டிசம்பர் 15 வரை தமிழகத்துக்கு காவிரியிலிருந்து 2000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”

அதிகம் படித்தது