மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு மீண்டும் உத்தரவு: 3 நாட்களுக்கு 6000 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்



Sep 27, 2016

தமிழகத்துக்கு இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு 6000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று மீண்டும் உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

siragu-cavery-judgement

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை, கர்நாடக அரசு சிறப்பு சட்டசபை கூட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று தீர்மானமிட்டது.

தமிழகத்துக்கு டிசம்பரில் சேர்த்துத் தருகிறோம் என்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது கர்நாடகா. இதனை எதிர்த்து தமிழக அரசு ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கில் தற்போது கர்நாடக அரசு அளித்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை என்று தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் நீதிபதிகள் லலித், தீபக் மிஸ்ராஆகியோர் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்துக்கு 6000 கனஅடி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்றும் தங்களது முதல்வரிடம் கூறுங்கள் என்று கர்நாடக மூத்த வழக்கறிஞர் நாரிமனிடம் கூறினார்கள்.

இந்த காவிரி வழக்கில் மத்திய அரசு தலையிட்டு, தமிழகம், கர்நாடகா -வுடன் சேர்ந்து சுமூகமாக தீர்வு காணவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு மீண்டும் உத்தரவு: 3 நாட்களுக்கு 6000 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்”

அதிகம் படித்தது