மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: சசிகலா முதல்வர் பதவியேற்புக்கு தடை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு



Feb 10, 2017

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அவரது தோழியான சசிகலா அதிமுக கட்சியில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சசிகலா முதல்வராக விரைவில் பதவியேற்பார் என்று கூறப்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வரை பதவியை ராஜினாமா செய்தார்.

supreme-court

ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனையடுத்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்திற்குள் வரும் என்று அறிவித்துள்ள நிலையில் சட்டபஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தில் சசிகலா முதல்வர் பதவியேற்புக்கு தடை விதிக்கக்கோரி மனு அளித்துள்ளது.

சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகுமானால், அந்த வழக்கின் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வரும் பட்சத்தில் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கும். எனவே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை சசிகலா பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று சட்டபஞ்சாயத்து அளித்த மனுவில் இருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சசிகலா வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டது உச்சநீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: சசிகலா முதல்வர் பதவியேற்புக்கு தடை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு”

அதிகம் படித்தது