மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும்



Jan 4, 2017

இன்று (04.01.2017) உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கின் விசாரணை நடந்தது. இதில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே அவரது வாதத்தை முன் வைத்தார். தமிழகத்தில் பருவமழை பொய்த்து விட்டதால் 60 சதவிகிதம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே காவிரியில் வினாடிக்கு 2000 கனஅடி நீர் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என கூறினார்.

siragu-supreme-court

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் பிப்ரவரி 7ம் தேதி முதல் இவ்வழக்கின் விசாரணை நடக்கும் என்றும் அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும்”

அதிகம் படித்தது