மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: நிர்பயா வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு உறுதி



May 5, 2017

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா 2012ம் வருடம் பேருந்தில் ஆறு பேர் அடங்கிய கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா 2012 டிசம்பரில் உயிரிழந்தார்.

Siragu nirbayaa

இச்சம்பவத்திற்குப் பின் டெல்லி மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தினர். இதில் ஆறு பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். மேலும் ஒருவன் 18 வயது சிறுவன் என்பதால் மூன்று வருட சிறை தண்டனைக்குப் பின் விடுவிக்கப்பட்டான்.

மற்ற நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நான்கு பேர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில், இக்குற்றவாளிகளுக்கு கருணை காட்ட முடியாது என்று அந்த நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கானத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு கூறியவுடன் நீதிமன்றத்தில் கைதட்டி வரவேற்றனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: நிர்பயா வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு உறுதி”

அதிகம் படித்தது