மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: நீதிபதி கர்ணன் தரப்பு வழக்கை அவசர வழக்காக ஏற்க மறுப்பு



May 12, 2017

தமிழகத்தைச்சேர்ந்தவரும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ். கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான சஞ்சய் கிஷன் கவுள் உட்பட பலநீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறினார்.

Siragu justice-karnan

இதைத்தொடர்ந்து நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தியது உச்சநீதிமன்றம். இவ்வழக்கில் நீதிபதி கர்ணன் மன நலபரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்குகடும் கண்டனம் தெரிவித்து மனநல பரிசோதனைக்கு மறுத்த நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்குத்தான் மனநல பரிசோதனை செய்ய வேண்டும்என்று உத்தரவிட்டார். மேலும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தம்மைஉச்சநீதிமன்றம் துன்புறுத்தியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குதொடர்ந்தார்.

இவ்வழக்கில்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 8 பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனைவிதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத சிறைதண்டனைவிதித்தும், இவரது அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்றும்தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இதனையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனைக்கு தடை கோரும் விதமாக நீதிபதி கர்ணன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. போதுமான நீதிபதிகள் இருக்கும்போது இவ்வழக்கின் விசாரணை நடக்கும் என்றும், இம்மனுவை அவசர வழக்காக விசாரணை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

தொடர்ந்து நீதிபதி கர்ணனை மேற்கு வாங்க போலீசார் தேடி வருகிறார்கள், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: நீதிபதி கர்ணன் தரப்பு வழக்கை அவசர வழக்காக ஏற்க மறுப்பு”

அதிகம் படித்தது