உச்சநீதிமன்றம்: நீதிமன்ற அறைகளில் கண்காணிப்பு கேமரா
Mar 29, 2017
நீதிமன்றத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் கடிதங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் ஆடியோ பதிவு இல்லாத சிசிடிவி கேமரா எனப்படும் கண்காணிப்பு கேமராவைப் பொறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளான ஆதர்ஷ் கேகோயல் மற்றும் உதய் லலித் ஆகியோர் அடங்கிய குழு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது இரண்டு நீதிமன்றங்கள் வீதம் நாடு முழுவதிலும் ஆடியோ பதிவு இல்லாத கண்காணிப்பு கேமராவை நீதிமன்ற அறைகளில் பொறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், அனைத்து யூனியன் பிரதேசங்களும் இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: நீதிமன்ற அறைகளில் கண்காணிப்பு கேமரா”