மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகள் வழக்கில் விசாரணை



Mar 29, 2017

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நிகழும் உயிரிழப்பைத் தடுக்க, நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இயங்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் 31க்குள் நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகளை மூட வேண்டும் என்று 2016 டிசம்பரில் உத்தரவிட்டது.

Siragu highways

மார்ச் 31 வரை கொடுத்த காலக்கெடுவை நவம்பர் 28 வரை நீடிக்க வேண்டும் என்று மறு உத்தரவு பிறப்பிக்கக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இதேபோல் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களும் நேற்று(28.03.17) மனு தாக்கல் செய்தது.

இன்று(29.03.17) இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டர் என்பதை 100 மீட்டர் என்று குறைக்குமாறு வாதாடினார்.

வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழிகளை நாட வேண்டும், அதற்காக மனித உயிர்களை பணயம் வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகள் வழக்கில் விசாரணை”

அதிகம் படித்தது