மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உணவு விடுதிகளில் சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயமில்லை



Jan 3, 2017

ஓட்டல்களில் சேவை கட்டணம் என்ற பெயரில் 5 முதல் 20சதவிகிதம் வரை மக்களிடமிருந்து வசூலிக்கப்படுவதாக உணவுத் துறையின் கீழ் செயல்படும் நுகர்வோர் விவகாரத்துறைக்கு புகார்கள் குவிந்தது.

siragu-hotel

இதையடுத்து ஓட்டல்களில் இதுவரை செலுத்தப்பட்டு வந்த சேவை கட்டணத்தை செலுத்துவது வாடிக்கையாளர்களின் விருப்புரிமை. ஓட்டல்களில் சேவை திருப்தியளிக்கவில்லை என்றால் சேவை கட்டணம் செலுத்த கட்டாயமில்லை என்று மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ன் படி சேவை கட்டணம் செலுத்துவது வாடிக்கையாளரின் விருப்புரிமை என்பதை விளக்கும் அறிவிப்பு பலகையை, இந்தியாவில் சேவை கட்டணம் வசூல் செய்யும் அனைத்து ஓட்டல்களும் வைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உணவு விடுதிகளில் சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயமில்லை”

அதிகம் படித்தது