மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு



Jan 4, 2017

உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா போன்ற ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.

siragu-dr-nasim-zaidi

பிப்ரவரி 4ம் தேதி கோவா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

பிப்ரவரி 15ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 4ம் தேதி முதல் கட்ட தேர்தல், மார்ச் 8ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறும்.

உத்திரபிரதேசத்தில் 7கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. பிப்ரவரி 11, 15, 19, 23, 27 மற்றும் மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது என்று நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.

இதையடுத்து ஐந்து மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 11ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு முறையில் தபால் வாக்குகள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இணையதளம் மூலம் ராணுவத்தினர் வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு”

அதிகம் படித்தது