மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்றம் உத்தரவு: தமிழக உள்ளாட்சித் தேர்தலை மே 14க்குள் நடத்தி முடிக்க வேண்டும்



Feb 21, 2017

தமிழகஉள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் சென்ற வருடம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது.இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Siragu election

வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டதில் இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுகசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரணை செய்தநீதிபதி இவ்வழக்கை ரத்து செய்தது மட்டுமல்லாது, பஞ்சாயத்து சட்ட விதிகளைப்பின்பற்றி புதியதாக தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்றும், உள்ளாட்சித்தேர்தலை டிசம்பர் 31க்குள் நடத்த வேண்டும் என்றும்உத்தரவிட்டனர்.

இந்தவழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தபொழுது உயர்நீதிமன்றநீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்திடம் கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதில்அளித்த மாநில தேர்தல் அதிகாரிகள் உள்ளாட்சித் தேர்தலை மே 15 க்குள் நடத்தமுடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். உத்தேச தேதி தேவையில்லை எனவும், சரியான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் மே 14 க்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கு விசாரணையை வரும் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்றம் உத்தரவு: தமிழக உள்ளாட்சித் தேர்தலை மே 14க்குள் நடத்தி முடிக்க வேண்டும்”

அதிகம் படித்தது