மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்றம்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்



Jan 9, 2017

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5ல் மரணமடைந்தார் என்ற செய்தி வந்தது.

siragu-jayalalitha

இதையடுத்து சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஜோசப் என்பவர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர் அளித்த மனுவில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதா-வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியது. மேலும் இது தொடர்பாக நான்கு வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இவ்வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு வரை ஒத்திவைத்தது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்றம்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்”

அதிகம் படித்தது